மந்திக் கருப்பர் துதி – கோட்டூர்

ஆரணச்சாலையும், சித்திரச் சவுக்கையும்
அன்ன சத்திர வீதியழகும்
அஸ்த மண்டபமுடன் கற்பக்கிரகமும்
ஆதி சோபன மண்டபமுடனே
பூரணப் பெருமையும் கம்பமணிமண்டபம்
பூஜை மாளிகை யுடனே
பொன்னழகு திருமதில் ஆலயவாசலும்
புதுராஜ கோபுர வடிவும்
{1}

வாரணப்பந்தியும் நந்திகளும் மேடையும்
மயிலாடும் வீதி யழகும்
வளருமுத்தையனுட மகிமையும் கிருபையும்
காதணி அழகிய மீனிணைப்பாக
அகஸ்தீஸ் வரஸ்வாமி வாழ்த்துதற்கு
இனியதாகுமே சிருங்கபுரமெனும் கோட்டூர்புரியின்
கருணை நயினார்வாசல் வளர்கின்ற
பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமிதுரையே! {2}

தீவட்டி உடனிருக்க பகல்வத்திநிறையிட்ட
சிங்காரம் ஒரு பாரிசம்
தீபதூபப் புகையுடன் சாம்பிராணிவாசங்கள்
தெய்வங்கள் ஒரு பாரிசம்
வாய்விட்டதட்டியே திருட்டுப் பிசாசுகளை
வகைகேட்ப தொரு பாரிசம்
வகைகேட்டிறுக்கியே சவுக்கடியி னாலடித்து
அதட்டுவது ஒரு பாரிசம்
{3}

நீவிட்டுவிடு சுவாமிநான் போறேன்போறேனென
நின்றாடுவது ஒரு பாரிசம்
நெற்றிமயிர் சுற்றியே நிலையாணியிட்டுத்
திருநீறணிவது ஒரு பாரிசம்
வரும்போது முத்துக்கருப்பே கருப்பையா
வாவென்று வரவழைக்கவே தான்
பெயரிட்ட புதுமையே பெரியகுலதெய்வமே
பெரியமந்திக் கருப்பண்ண சுவாமிதுரையே!
{4}

காசிக்குமப்பாலே அறுபதாம் காதவடி
காணாது கண்ட மயிலே
கர்நாடுதேசமும் தெஞ்சிமேல் மட்டுக்கும்
கத்தியே வெட்டி வருவாய்
தேசக் குதிரைகொண்டு ஒட்டயானைகொண்டு
தெஞ்சி மேல் வந்திறங்கி
பேரானகோட்டூர் நகர்தனில் வளர்கின்ற
பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமிதுரையே! {5}

காரிட்ட கொண்டையும் கமலமுகவதனமும்
காதில் கடுக்கன் அழகும்
நேரிட்டபார்வையும் நெற்றியில் திலகமும்
ஏகாந்த வல்ல வெட்டும்
சீரிட்ட சித்தாடை வாங்கும்சமுதாடும்
சேர்ந்திருக்கக் கருங்கச்சை வல்லவெட்டும்
தான்பெயரிட்ட புதுமையே பெரியகுலதெய்வமே
பெரியமந்திக் கருப்பண்ண சுவாமிதுரையே!
{6}

எண்திசை புகழ்கின்ற தென்னாலைநாடுதனில்
ஏக மாகிய மூர்த்தியாம்
லண்டப்பிசாசுகள் தொண்டரிடம் அணுகாமல்
வர முதவும் மேகவர்ணம்
அண்ட ரசங் கோட்டூரில்
அழகிய நயினா ரோடே
மண்டபம் நான்குகால்சவுக்கையில் வளர்கின்ற
பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமிதுரையே! {7}