சரணம் சரணம் முருகையா
சரணம் சரணம் முருகையா
மலைக்குடி வேலன் இன்று கடல் தாண்டினான்
லண்டன் மாநகரில் வந்து குடியேறினான்
சிலைவடிவாக வந்து வரம் நல்கினான்
திருவருள் கொள்வதற்கு துணையாகினான் (சரணம்)
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை – தமிழர்
ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை – பொங்கும்
தரும வெள்ளம் குறைவதில்லை – தமிழர்
புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை (சரணம்)
நாகரீகம் வளர்ந்த மேற்கினிலே – குமர
நாயகன் கோவில் கண்டார் ஆசையிலே
தேக உழைப்பை சிலர் உவந்து தந்தார் – சிலர்
திரவியம் தந்ததுடன் தமையும் தந்தார் (சரணம்)
ஆறுபடைவீடு என்று அழைத்து வந்தோம் – ஒரு
அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம்
ஏழுபடைவீடு என்று தொடர்ந்து செல்வோம் – லண்டன்
எழுப்பி கோவிலையும் சேர்த்துக் கொள்வோம் (சரணம்)
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம் பொருள்
இலங்கும் மலேசியாவில் பலகிராமம்
துலங்கிடும் லண்டனுக்கு தொடர்ந்து வந்தான் – எங்கள்
சுவாமிநாதன் அருளை சுரக்க வந்தார் (சரணம்)
அருணகிரி ஒருநாள் வரைந்து வந்தார் – அவன்
அடிச்சுவட்டில் பலபேர் எழுதிவைத்தார் – கருணை
முருகன் தன்னை ஏற்றி வைத்தார் – கவிஞர்
கண்ணதாசன் இதனைபாடி வைத்தார் (சரணம்)