பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை

எள்ளுப் பொரித்த பொரியும்
இடித்தவல் தன்னிற் கலந்து
வள்ளிக் கிழங்கைத் திருத்தி
வாழைப் பழத்தை யுரித்து
( 1 )

உள்ளிய பாகுந் திரட்டி
உண்ணும் படியே தருவோம்
கள்ளத் திருமால் மருகா
கணபதி சப்பாணி கொட்டாயே ( 2 )

ஆறுதேங்கா யவல் தூணி
அதற்குத் தகுந்த எள்ளுருண்டை
நூறு குடலை மாம்பழம்
நொடிக்கு மளவி லமுது செய்ய
( 3 )

வல்ல பிள்ளாய்
ஆடாய் பாடாய் சங்கீதம்
அடியேன் காணநின் றாடாயே
சண்டப் பெருச்சாளி யேறி ( 4 )

சடுகுடு வென்ன வுலாவி
இண்டை யிளம்பிறை சாய
இணங்கிய கொம்போ ரிரண்டூத
அண்டத் தமரர் துதிக்க
( 5 )

அடைக்கலங் காத்த பிரானாரே
குண்டைக் கணபதி நம்பி
குடங்கையாற் சப்பாணி கொட்டாயே
பொழுது விடிந்தது பொழுது ( 6 )

போய்த் திருமலைமே லேற வேண்டும்
ஏறி மலர்ந்தபூக் கொய்ய வேண்டும்
கொய்து திருமுடி சாத்த வேண்டும்
சாத்திக் கைகட்டி நிற்க வேண்டும்
( 7 )

நின்று திருவிளக் கேற்ற வேண்டும்
ஏற்றி அரஹர வென்ன வேண்டும்
ஐயா கணபதி நம்பி
ஆயிர நாம முடையாய் ( 10 )

பொய் யில்லா மெய்யுரைப்பாய்
போன தெல்லாந் தருவாய்
வெள்ளித் தாலம் பூசிவைத்து
வேண்டும் படியே யிட்டுண்டு
( 11 )

பள்ளிக் கேற்க நடவாய்
பாக்கியஞ் செய்த பிள்ளாய்
பிள்ளாய் பிள்ளாய் பேருடையாய்
பிரம மென்னும் பெயருடையீர் ( 12 )

பிள்ளைகள் தங்கள் பிரானாரே
இருந்தீரே பிரானாரே
எங்கள் மனது கலங்காதே
பள்ளித் தடுக்குங் கையேடும்
( 13 )

படிக்குஞ் சுவடியும் பரிந்தெடுத்துத்
துள்ளித் திரியுங் கால்தன்னை
சுகமே நிறுத்தும் பிரானாரே
ஓடாதே ஒளியாதே ( 14 )

இட்டதே சோறும் பெற்றதே கறியும்
உண்டு தூங்கிப் பூசைமுடித்து
வெள்ளிமுளைக்கப் பள்ளிக்குவாரும்
( 15 )