பிள்ளையார் வணக்கம்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
அருமையாக வீற்றிருந்து வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
அவல்பொரி கடைலையும் அரிசி கொழுக்கட்டையும்
அன்புடனே ஏற்றுக் கொள்ளும் பெருமை வாய்ந்த பிள்ளையார்
( 1 )

வேலவனின் அண்ணனாம் வேள்விக் கெல்லாம் முதல்வனாம்
பார்வதியின் மைந்தனாம் பார்புகழும் பிள்ளையார்
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார் ( 2 )

சங்கரனின் புதல்வனாம் சாத்திரத்தின் முதல்வனாம்
சகலத்திற்கும் மூலவனாம் சக்திவாய்ந்த பிள்ளையார்
வன்னிமரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வமரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
( 3 )

நெல்லிமரத்து நிழலிலே நின்றிருக்கும் பிள்ளையார்
பக்திதரும் பிள்ளையார் முக்திதரும் பிள்ளையார்
ஆதரிக்கும் பிள்ளையார் ஆனைமுகப் பிள்ளையார்
அருளை அள்ளித்தந்திடும் ஆண்டவனாம் பிள்ளையார் ( 4 )

முற்றிற்று