சவ்வாது புலவர் இயற்றிய
கொடுமளுர் முருகன் பதிகம்
பூ மேவு சண்முக விலாசமும் மீராறு
புருவமும் கிரீடமுடியும்
பொட்டுநுத லும்கனக குண்டலமும் அருண்மாரி
பொழியும் ஈராறு விழியும்
மாமேவு செம்பவள வாய்மந்த காசமும்
மாலையணி யும்கழுத்தும்
வாகுகே யூரமும் இராறுபுய முங்கையும்
வடிவேலும் அபயகரமும்
தாமேவு மெஞ்ஞோப வீதமணி மார்பமும்
சாத்துதிரு வுத்தரியமும்
தாமரைப் பாதமுந் தமியனேன் காணப்ர
சன்னமாயக் காட்சிதருவாய்
கோமேவுமி ந்திரன் முதலமரர் தொழவவுணர்
கோனுயிர் குடித்ததளவாய்
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே. (1)
வளந்தரு திருப்பரங் குன்றுதிரு வேரகம்
வயலூர் திருக்குடந்தை
மாயூர கிரிகுன்று தோறாடல் சோலைமலை
வளர் சுப்ரமணிய பேரூர்
களந்தையரு ணாசலம் விராலிமலை தோகை மலை
கதிர்காமம் வையாபுரி
கங்கைநதி பாய் பழநி செந்தூர் திருத்தணிகை
கல்லூர் விரூபாட்சி சீர்
அளந்திடுங் காவளுர் வேங்கட செங்குளஞ் (ம்)
(அ) மைந்தபே ரூராதியாம்
அற்புதத் தலமேவு நாயகா தற்சமயம்
அன்புவைத் தெனையாளுவாய்
குளந்தரு கணானுக்கு மெஞ்ஞான தேசிகா
கூவிடும் காலாயுதா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே. (2)
சரவண பவா ! கனக மயில்வாகனா | அசுர
சங்கார கோலாகலா !
தகரேறு காங்கயா ! பரமகுரு நாயகா !
சண்முகா ! கார்த்திகேயா !
அரவணை முராரிமரு கா!கோடி சூரியப்ர
காச வருள் வாசாலகா!
யானைமுக னுக்கிளைய வேலாயு தா! தெய்வ
யானைபுணர் சுப்ரமணியா!
பிரணவச டாட்சர மகாமந்தர தந்திர
ப்ரதாபா ! குறத்திகணவா !
பெண்ணரசி கன்னிதிரு சூலிநெடு நீலியுமை
பெற்றுபுத் திரவிசாகா !
குரவணையு நின்பாத சேவைதந் தென்னையாட்
கொள்ளுகதிர் காமநாதா !
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே (3)
சந்தன விருட்சமும் கற்பக விருட்சமும்
தங்கப்ர காசமான
சந்தான தாருவும் மந்தார மும்தெயவ
தாருவும் பாரிசாத
சுந்தர விருட்சமும் சண்பக விருட்சமும்
சோதியும் சாம்ப்ராணியும்
சூதமர மும்பலா வாழைமர முக்கனி
துலங்குவட வாலெனச் சொல்
பைந்தரு விருட்சமும் குங்கும விருட்சமும்
பார்த்திப விருட்சவகையும்
பாதிரி விருட்சமுங் மொட்டுடை விருட்சமாப்
பாரிற்ப்ர சித்தியாகிக்
கொந்தமர் விருட்ச நிழல் வந்துவிளை யாடுனது
கோலத்தை யென்னசொல்வேன்
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே. (4)
நக்கனரு ளால்வந்து மனவேக ரதமேறி
நால்வாய் முகத்தாருகன்
நல்வச்ர வாகங்கி முகவனுட னேமேக
நாதனாம் பானு கோபன்
எக்கலிடு மூவாயி ரம்புதல்வர் மந்திரிகள்
ஏழா யிரத்து நால்வர்
எதிரேறு சிங்கமுகன் சதிசூரன் சுரேந்
திரன்படைத் தலைவர் முதலோர்
திக்கதல மிக்கவரு அசுரரொடு சூரைச்
செயித்து நட மாடுமயில்மேல்
தேவர் சிறை மீட்கவே யேறிவரு நின்மகிமை
செப்புதற் கெளி தாகுமோ
குக்குடவி நோதனே! (ஆ)யாறுமுக கம்பீர
கோதண்ட பாணிமருகா !
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே. (5)
ஆடாது சித்துவிளை யாடலாம் திக்கு விச
யம்செய்து வெற்றிபெறலாம்
ஆசுகவி மதுரகவி சித்ரவித் தாரகவி
யானந்த மாய்ப்பாடலாம்
ஈடாரு மில்லாத தேவரை யழைத்துடன்
இரும்பையும் பொன்னாக் கலாம்
இந்த்ரசா லத்துடன் மயேந்த்ரசா லங்கள் செய்
தெங்கும்ப்ர சித்திபெறலாம்
தாடாவு மிருகத்தின் வாய்கட்டி வேட்டையின்
தந்திரங்க ளும்புரியலாம்
தாழாத இவையெலாம் அய்யநின் னருள் பெறுந்
தன்மைக்கு நிகராகுமோ ?
கோடானு கோடிமனு வந்தடி பணிந்திடுங்
கோதகல் சுயம்பிரகாசா ?
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே (6)
சம்புவுக் குபதேசம் வைத்தாய் அன்றியுஞ்
சம்பந்த மூர்த்தியாகிச்
சமணர்களை வெங்கழுவி லிட்டாவா ! நித்தியத்
தத்துவப்ர காசமாக
நம்பினவர் அன்புகொண்டபு அரவர் நினைத்தவரம்
நல்கியே யாதரித்தாய்
நக்கீர தேவர்சிறை மீட்டாய் சிறைக்குளே
நான்முகத் தவனைவைத்தாய்
உம்பருக் கும்தயவு செய்தாய் குறத்திபால்
ஓங்குசெவ் வேங்கைமரமாய்
உற்றருளி னாய் அருண கிரிநாதர் செந்தமிழ்
உகந்தாய் உளத்திருந்து
கும்பமுனி வன்தனக் கருள் செய்தாய் நின்மகிமை
கூறுதற் கெளிதாகுமோ ?
கோகனக் வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே. (7)
சித்திமதி லுன்திருப் பாதமே கெதியென்று
சிந்திக்கும் அன்பருக்குச்
செல்வமுண் டாம்சகல கல்வியுண் டாம்புவன
தேசப்ர சித்தியுண்டாம்
நித்திய சரீரமுண் டாம் இலக் குமிகருணை
நிலவுங் கடாட்சமுண்டாம்
நிகரில் பலலெட்சசது ரங்கபல முண்டாம்
நெடுஞ்சமரில் வெற்றியுண்டாம்
புத்ரசந் தானமுண் டாம்சகல சௌபாக்கியப்
போக போக் கியமுமுண்டாம்
புத்தியுண் டாநல்ல முத்தியுண் டாம்முனது
புகழினை யுரைக்கலாமோ
கொத்தடிமை குடியடிமை யாமுழுது என்னையாட்
கொண்ட கதிர் காமவேலா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே (8)
பாரமாய் உன்பாத சேவைசெயும் அன்பரைப்
பாவந் தொடர்ந்திடாது
பஞ்சகலி நாடாது கண்ணேறு நாவேறு
பஞ்சபா வந்தொடாது
சோரசா ரக்கிரியை சாமானியப்பில்லி
துட்டமிரு கம்தொடாது
சொற்பனமு மாதாளி பண்ணாது பொறிவிடந்
தொடராது பூதம் அகலும்
கூரான வன்பிணிகள் நேராது நின்மகிமை
கூறுதற் கெளிதாகுமோ
குக்குட விநோதனாஞ் சமரமுக கெம்பீர
கோலவடி வேலாயுதா!
கோரரண வீர செய நீர வடி யார்க்குதவு
குல தெய்வ மெஞ்ஞானமே
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே (9)
கயிலாச நாதர்நித் தியகலி யாணிதம்
கருணா கடாட்சமுண்டாம்
கல்வாச னாட்டிளசை மேவுபெரு மருதூர்
கதிக்குநக ரப்ரதாபன்
செயலாளி திண்ணப்ப வணிகன் அருளால் வந்து
சென்மித்த வெள்ளையப்பன்
செம்மைசேர் தருராம நாதமதி யூகிதரு
செல்வவான் பழனியப்பன்
தயைமேவு சுப்ரமணி யாவென்று கூப்பிடச்
சந்தான பாக்ய நல்கிச்
சத்தாங்க முங்கொடுத்து எத்தேச காலமும்
தற்காத்த தெய்வம் நீயே
குயில் கூவு சோலைமலை செந்தூர் திருப்பரங்
குன்றிலுறை யுங்க டம்பா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகரு பரமுருகனே (10)
வாழ்த்து
அருவாயு முருவாயு மருவுருவம்ஆகிவிளை
யாடுமா தேவர்வாழி
அலையாழி அமுதங் கடைந்தமரர் துயர்தீர்த்த
அச்சுதா னந்தன் வாழி
கருவிலுரு வாய்வகுத் தகிலாண்ட கோடியுங்
கற்பித்த வேதன் வாழி
கண்ணாயிரங்கொண்டு விண்ணோரை ரட்சித்த
கார்மேக வூர்திவாழி
மருவுமறை யவர்களொடு முப்பத்து முக்கோடி
வானவர்கள் முனிகள்வாழி
மன்னரொடு வணிகேசர் காராளர் முதலாக
வளர்சீவ செந்துவாழி
தருவனைய திண்ணப்ப வணிகனருள் ராமநா
தன்கிளை தழைத்து வாழி
தயவுபுரி கொடுமளூர்க் குமரகுரு பரமுருகா
சன்னிதியும் வாழிதானே