ராஜேஸ்வரி பாமாலை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்
ஆன எம் ஞான தேவா!
அறுகுடன் தும்பையும் அத்தியும் கொன்றையும்
அணிசெய்யும் அழகு மார்பா!
எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்சு
இற்றிட செய்த வீரா!
இலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதை நேசா!
தண்டையோடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தநடை கொள்ளும் பாதா!
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்த ஈசா!
தெண்டிரை சூழுலகில் தேவிரா சேச்வரி
தெய்வமாக் கருணை பாட!
சித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தந்து நீகா! (ஓம் சக்தி)

மாதவன் சீதரன் மதுசூதனன் துளசி
மாலை மார்பன் கேசவன்
வைகுந்தன் அச்சுதன் மலைமேலும் அலைமேலும்
வாழ்கின்ற மறைநாயகன்
தாதவிதழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்
சனார்த்தணன் தேவதேவன்
சாரங்கன் நாரணன் தாமோதரன் கோதை
தலைவன் ஆழ்வார்கள் நேசன்
மேதினி அளந்தகிரி விக்கிரமன் திருமகள்
விழைகின்ற பதுமநாபன்
வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்
மேகவண்ணன் தங்கையே
ஈதென வரைந்த யாம் ஓதுதற் கரிய நின்
இசைபாட மொழியேது காண்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மாலினி கபாலினி மனோன்மணி நந்தினி
வன்னி மண்டல வாசினி
மானவாதி யோகினி மனாதீத நாயகி
வாகினிமன மோகினி
சூலினி சுவாசினி சுமங்கலி சுந்தரி
துணைவி திரிபுரசுந்தரி
சோதிச் சொரூபிணி சுதாமினி அம்சினி
சும்ப திசுர மர்த்தினி
சாலினி சனாதினி தருணி கல்யாணி சிவ
சங்கரி சாரு கேசி
சாம்பவி காலாவதி தருமவர்த் தணிஜனனி
சாமுண்டி தேவதேவி
ஏலவார் குழலிஎன எண்ணரிய பெயர்பூணும்
ஈஸ்வரி போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மாசக்தி கௌமாரி மாதங்கி காங்காளி
மனோன்மணி புவனேசுவரி
வராகி இந்த்ராணி வயிரவிஜய வைணவி
மகேச் வரிகாத்யாயனி
பேசரிய அபிராமி பிரமாணி காயத்ரி
பிறைசூடி முத்துமாரி
பெரியநாயகி குமரி அரியாநாரணி கௌரி
பெற்றமிக கொற்றி நீலி
தேசு மிக சுந்தரிப வானிகார்த்தி கைவானி
த்ரியம்பகி சிவசங்கரி
திரிசூலி காமாட்சி சிம்மவா கனிமயிடன்
சிரமேறும் கண்டி காளி
ஈசன்மனை யாட்டிஎம் பெருமாட்டி மீனாட்சி
இணையடிகள் போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி முக்கண்ணி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி
நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்து இனிக்கின்ற
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி
பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்த்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி
ஏவல் கொண்டுலகு பல காவல்செய் அன்னை நின்
இணையடிகள் போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நோக்கும் திசைதோறும் நூபுரத்தாள்களும்
நூல் போல் ஒசிந்த இடையும்
நொடிதோறும் நொடிதோறும் புதிதான எழில் கொள்ளும்
நுவலரி யதிரு மேனியும்
வார்க்குங் குமக்கச்சு மார்பும் அம்மார்பினில்
வாடாதமலர் மாலையும்
வயிரமொடு நவமணி வயங்குமங் கல நாணும்
மணம் வீசும் இனிய பொலிவும்
காக்கும் கரங்களும் அங்குசம் பாசம்
கரும்பு வில் மலர்கள் ஐந்தும்
கனிவாயில் மூரலும் கருணைபொழி விழிகளும்
கனகமணி ஒளிரு முடியும்
ஈர்க்கும் சுடர்முகமும் இருவிழி களிப்பையாம்
எங்கெங்கும் காண அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பனிதங்கு நிலவுபோல் பால் போல் பளிங்குபோல்
பட்டொளி நிறைந்த வடிவம்
படிகமணி மாலையும் ஏடும் தரித்து யாழ்
பயின்றருளும் நான்கு கரமும்
புனிதங்கள் யாவும் பொருந்த வெண்டாமரைப்
பூமேல் விளங்கு பதமும்
பொழுதெலாம் எண்ணும் என் பழுதெலாம் போக்கிநற்
புலமை தர வேண்டும் அம்மா
கனிதந்து மலர் தந்து கவிதந்து தொழுவோர்க்குக்
கண்தந்து காக்கும் அரசே
கலைஞான மகளென்ற நிலையான புகழ் கொண்ட
கருணைமயமான பொருளே
இனிதங்கு தடையின்றி யான்பாட நீ கேட்க
இதயம் கனிந்தருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பிறையார் சடைபித்தன் பிஞ்ஞகன் சங்கரன்
பிறவாத யாக்கை உடையோன்
பேராயிரங் கொண்ட பெருநாவலன் சிவன்
பிரமன் அறியாத மறையோன்
கறையார் கழுத்தினன் கண்ணுதல் கயற்கண்ணி
காதலன் கங்கை நாடன்
காளத்தி நாதன் கபாலி கங்காதரன்
கயிலையோன் மங்கைபாகன்
சிறையார் புனற்றில்லைச் சிற்றம்பலத்தினன்
த்ரியம்பகன் தியாகராசன்
திரிபுரம் எரித்தவன் குருபரன் ஈசன்எனச்
செப்பும்எம் அப்பனான
இறையோனும் நீயும் எம் இல்லங்கள் தோறும்
எழுந்தருள வேண்டும் அம்மா
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி
சிவகாமி தில்லை மன்றில்
தென்குமரி பகவதி திருவானைக்காவினில்
திகழும் அகிலாண்டேச்சுவரி
காரார் மதிற்கச்சி காமாட்சி அங்கயற்
கண்ணிசெந்தமிழ்மாமதுரையில்
கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளிவங் காள மண்ணில்
தாரர்சிவன் தோலும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த
தையல் அபிராமவல்லி
ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆள வலவோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சிந்தூரம் குங்குமம் செவ்வானம் அவ்வானம்
திகழ வரும்கதிரின் உதயம்
தேசு மிகு மாணிக்கம் திரு ஏறு கமலம் அச்
செங்கமலம் அஞ்சு பவழம்
மந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்
வண்டூ ரும் மலையில் நறவம்
மான்மதம் செங்குருதி போன்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறும் முத்தம்
செந்தீயின் வண்ணம் என வேய்சொல்லும் மேனியும்
செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்
எந்தாய் நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

தேறாத கவிஎனினும் மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்
சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்
ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
ஆரை நான் நொந்து கொள்வேன்
அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்
நீறாக வேந்ருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்
நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகின்றேன்
ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

வானமும் பூமியும் மாறினும் மாறாத
வாய்மை வடிவான தேவி
வழிபாடு செய்பவர் குறைபாடு தீரத்தின்ப
வாழ்வுதரும் ஆதி தேவி
தேனுமாய் அமுதுமாய்ச் சித்தத்திலே நின்று
தித்தித் தினிக்கும் தேவி
சேரரின் மார்பை இருகூறாகவே செய்யும்
திரிசூலம் ஏந்தும் தேவி
கானமும் சிற்பமும் கலைமலர் பலப்பலவும்
காணிக்கை கொள்ளும் தேவி
கற்பனையும் ஒப்பனையும் காலம் ஒரு மூன்றும்
கடந்தஎம் தேவதேவி
ஈனமொன்றண்டாத ஞானமாதேவி உனை
என் சொல்லி வாழ்த்துவோம் யாம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

வரம்பற்ற ஆற்றல் வரப்பெற்ற பண்டனை
மற்றும் அவன் பெற்ற மகனை
மாறுகொள் விடங்கனை மடம்படு விசுக்கி றனை
மதுகையிடப்பன் மயிடனை
உரம் பெற்ற சும்பனை நிசும்பனை நரகனை
உதிரபீசன் மரபினை
ஒழிவிலாச் சண்டனை முண்டனை இரணியனை
உணர்வற்ற தக்கன் தன்னை
சிரம்பத்து பெற்றவனைத் தேரேறி மாவேறிச்
செற்ற எம் வெற்றி மயிலே
சேவிக்கும் அடியாரை வாழ்விக்கும் ஆசையால்
செங்கோல் பிடித்த அழகை
இரும்புவி புரந்தருள் பெரும்பெயர் மடந்தை உனை
என் சொல்லி போற்று வோம்யாம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்
வேயின் குழல் முழவு வீணைநாதச் சுவரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்
ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பருக்குக் கோடி நலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்
ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பொன்னும் நீ நான் தேடும் பொருளும் நீ புகழும் நீ
போகங்கள் யாவும் நீயே
புறமும் நீ அகமும் நீ புலியெங்கும் நான் காணும்
பொலிவு நீ போதம் நீயே
முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவிலா
முழுமை நீ ஞானம் நீயே
முதுமை நீ இளமை நீ மோசம் நீ தாகம் நீ
மோனம் நீ கானம் நீயே
மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று
மனமுருகி நின்றதெல்லாம்
வஞ்சமோ என்துயர் கொஞ்சமோ இவ்வாறு
மரப்பதுவும் ஒரு நெஞ்சமோ
இன்னும் நீ சுற்றும் இரங்கா திருந்திடில்
என்னுயிர் இனி மிஞ்சுமோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

என்ன கவி பாடினால் உன் மனது மாறுமோ
என்மீது கருனை வருமோ
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமா
சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ
சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்
சொல்லுபவர் யாருமில்லையோ
சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ
செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ
இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்
கனலும் உன் வடிவெனினும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்
ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர் சுமந்தோம்
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்
போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்த்தேடி எங்குபெறுவோம்
ஏற்றருள வேண்டும் என் இதயத்தை எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையொடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை
முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாகி உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை
உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரெழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
இற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

கொற்றத் தமிழ்க்கம்பன் குற்றம் மறைக்கநீ
கொட்டிக் கிழங்குவிற்றாய்
கூறுதமிழ் ஏட்டினை நீரிலும் நெருப்பிலும்
குலையாமல் காத்து நின்றாய்
வெற்றித் தமிழ்க்காள மேகமென வீணனையும்
மேதையாய் நீஆக் கினாய்
மெய்ஞானி சொற்றமிழை மெய்பிக்க வானத்தில்
வெண்ணிலவு தோற்றுவித்தாய்
ஒன்றித் தலம்விட்டு வள்ளலார் பசிதீர
ஓடோடிச் சோறு தந்தாய்
உத்தமக் கவியரசன் குருபரன் முன்பு நீ
ஒளிசிந்த நடைப யின்றாய்
இற்றைக் கென் தமிழோடும் சற்றுவிளையாடி நீ
இன்னருள் புரிய வருவாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நாள் என்றும் கோள் என்றும் நாங்கள் அஞ்சோம் அந்த
நமனையும் ஏவல் கொள்வோம்
நாடாளும் அரசர்க்கும் ஈடாக மேலாக
ஞாலமுழுதாள வல்லோம்
வாள் ஒன்று கண்ணுடைய மங்கை நல் லாட்கன்றி
மற்றையார்க்கு அடிமை செய்யோம்
வறுமையும் கொடுமையும் மடமையும் அகலவே
மாசக்தி பேர்சொல்லுவோம்
தாள் ஒன்று தொண்டரைத் தாங்கும் பராசக்தி
தன்மக்கள் நாங்கள் எனவே
தறுகண்மை குன்றாத பெருமக்கள் கூட்டத்தில்
சாரும் நாள் எந்த நாளோ
யாளியும் விடையுமே ஊர்தியாய் அண்டங்கள்
யாவும் பரந்தருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
(ஓம் சக்தி)

கற்பூர சோதியில் கமலால யத்தினில்
கயிலாய மலை மீதினில்
கந்தருவர் கின்னரர் கணநாதர் சித்தர்கள்
கண்டு தொழ நின்ற பொருளே
வெற்பூறு கங்கையை வில்வமுடன் ஆத்தியை
வெள்ளேருக் கைத்தும் பையை
மிடைகொன்றை பாம்பினோடு பிறைசூடுவான் பங்கில்
மேவித்தழைத்த எழிலே
மற்போர் துணிந்த மாயிடன் தலைமீது
மனைபோற்ற ஏறு திறலே
மாறுபடு சூரர் குலம் நீறு படமேல்தந்து
வாகைமலர் சூடும் அருளே
எற்பொருது மேலெலும் இளஞாயிறே எங்கள்
ஏழமை தவிர்த்த அரசே
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சரவணா சண்முகா சக்திவடி வேலா
சடானனா மயில் வாகனா
தணிகாச்சலா அருணகிரிகாதலா செந்
தமிழ்ச் சுவை பழுத்த அழகா
குருபரா கந்தா குகா கார்த்திகேயா
குறத்திமணவாள முருகா
கும்பிடும் அடியவர் வெந்துயர் களைகின்ற
கொற்றவை பெற்ற குமரா
கருதிவரும் யாவினையும் உறுதிபெற வேநல்கும்
கருணைமய மான தலைவா
களங்கண்ட வீரா நலந்தந்து காவெண்
கடம்ப மலர்மார்பா என
இருபோதும் தொழுவோர்க்கு இனிபோதும் போதும் என
ஈவோனுக்கு அன்னை நீ காண்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

எனையாளும் அன்னை நின் இருபாதகமலங்கள்
இரவி போல் ஒளி வீசுமாம்
எதிரான தக்கனை இரணியனை எச்சனை
எரியேற்றிமுறை காக்குமாம்
தனைநாளும் மறவாமல் நினைவார்தம் குரல்கேட்டுத்
தாழாது எழுந்தோடுமாம்
தலைமாலை சூடி ஒரு கொலைவாளும் ஏந்தியே
சங்கார நடமாடுமாம்
வினையோடு பகைபிணிகள் வேதனை தவிர்க்கின்ற
மெய்யான துணையாகுமாம்
மேலுக்கு மேலான வெற்றிப் பதங்கட்கு
வேறேது நிகராகுமாம்
இனைய என எழுதரிய புகழுடைய நினதடிகள்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

எனையாளும் அன்னை நின் இருபாதகமலங்கள்
இரவி போல் ஒளி வீசுமாம்
எதிரான தக்கனை இரணியனை எச்சனை
எரியேற்றிமுறை காக்குமாம்
தனைநாளும் மறவாமல் நினைவார்தம் குரல்கேட்டுத்
தாழாது எழுந்தோடுமாம்
தலைமாலை சூடி ஒரு கொலைவாளும் ஏந்தியே
சங்கார நடமாடுமாம்
வினையோடு பகைபிணிகள் வேதனை தவிர்க்கின்ற
மெய்யான துணையாகுமாம்
மேலுக்கு மேலான வெற்றிப் பதங்கட்கு
வேறேது நிகராகுமாம்
இனைய என எழுதரிய புகழுடைய நினதடிகள்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

விநாயகர் காப்பு
மாதவன் சீதரன்
மாலினி கபாலினி
மாசக்தி கௌமாரி
மூவர்க்கும் தேவர்க்கும்
நோக்கும் திசைதோறும்
பனிதங்கு நிலவு போல்
பிரயார் சடைப்பித்தன்
சீரார் பெருந்துறையில்
சிந்தூரம் குங்குமம்
தேறாத கவியெனினும்
வானமும் பூமியும்
வரம்பற்ற ஆற்றல்
ஆயிரம் இதழ்கொண்ட
பொன்னும் நீ நான்
என்ன கவி பாடினால்
காற்றை படைத்தவள்
நெற்றியில் நீதந்த
கொற்றத் தமிழ்க்கம்பன்
நாள் என்றும் கோள்
கற்பூர சோதியில்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்
ஆன எம் ஞான தேவா!
அறுகுடன் தும்பையும் அத்தியும் கொன்றையும்
அணிசெய்யும் அழகு மார்பா!
எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்சு
இற்றிட செய்த வீரா!
இலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதை நேசா!
தண்டையோடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தநடை கொள்ளும் பாதா!
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்த ஈசா!
தெண்டிரை சூழுலகில் தேவிரா சேச்வரி
தெய்வமாக் கருணை பாட!
சித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தந்து நீகா! (ஓம் சக்தி)

மாதவன் சீதரன் மதுசூதனன் துளசி
மாலை மார்பன் கேசவன்
வைகுந்தன் அச்சுதன் மலைமேலும் அலைமேலும்
வாழ்கின்ற மறைநாயகன்
தாதவிதழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்
சனார்த்தணன் தேவதேவன்
சாரங்கன் நாரணன் தாமோதரன் கோதை
தலைவன் ஆழ்வார்கள் நேசன்
மேதினி அளந்தகிரி விக்கிரமன் திருமகள்
விழைகின்ற பதுமநாபன்
வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்
மேகவண்ணன் தங்கையே
ஈதென வரைந்த யாம் ஓதுதற் கரிய நின்
இசைபாட மொழியேது காண்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மாலினி கபாலினி மனோன்மணி நந்தினி
வன்னி மண்டல வாசினி
மானவாதி யோகினி மனாதீத நாயகி
வாகினிமன மோகினி
சூலினி சுவாசினி சுமங்கலி சுந்தரி
துணைவி திரிபுரசுந்தரி
சோதிச் சொரூபிணி சுதாமினி அம்சினி
சும்ப திசுர மர்த்தினி
சாலினி சனாதினி தருணி கல்யாணி சிவ
சங்கரி சாரு கேசி
சாம்பவி காலாவதி தருமவர்த் தணிஜனனி
சாமுண்டி தேவதேவி
ஏலவார் குழலிஎன எண்ணரிய பெயர்பூணும்
ஈஸ்வரி போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மாசக்தி கௌமாரி மாதங்கி காங்காளி
மனோன்மணி புவனேசுவரி
வராகி இந்த்ராணி வயிரவிஜய வைணவி
மகேச் வரிகாத்யாயனி
பேசரிய அபிராமி பிரமாணி காயத்ரி
பிறைசூடி முத்துமாரி
பெரியநாயகி குமரி அரியாநாரணி கௌரி
பெற்றமிக கொற்றி நீலி
தேசு மிக சுந்தரிப வானிகார்த்தி கைவானி
த்ரியம்பகி சிவசங்கரி
திரிசூலி காமாட்சி சிம்மவா கனிமயிடன்
சிரமேறும் கண்டி காளி
ஈசன்மனை யாட்டிஎம் பெருமாட்டி மீனாட்சி
இணையடிகள் போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி முக்கண்ணி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி
நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்து இனிக்கின்ற
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி
பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்த்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி
ஏவல் கொண்டுலகு பல காவல்செய் அன்னை நின்
இணையடிகள் போற்றி போற்றி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நோக்கும் திசைதோறும் நூபுரத்தாள்களும்
நூல் போல் ஒசிந்த இடையும்
நொடிதோறும் நொடிதோறும் புதிதான எழில் கொள்ளும்
நுவலரி யதிரு மேனியும்
வார்க்குங் குமக்கச்சு மார்பும் அம்மார்பினில்
வாடாதமலர் மாலையும்
வயிரமொடு நவமணி வயங்குமங் கல நாணும்
மணம் வீசும் இனிய பொலிவும்
காக்கும் கரங்களும் அங்குசம் பாசம்
கரும்பு வில் மலர்கள் ஐந்தும்
கனிவாயில் மூரலும் கருணைபொழி விழிகளும்
கனகமணி ஒளிரு முடியும்
ஈர்க்கும் சுடர்முகமும் இருவிழி களிப்பையாம்
எங்கெங்கும் காண அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பனிதங்கு நிலவுபோல் பால் போல் பளிங்குபோல்
பட்டொளி நிறைந்த வடிவம்
படிகமணி மாலையும் ஏடும் தரித்து யாழ்
பயின்றருளும் நான்கு கரமும்
புனிதங்கள் யாவும் பொருந்த வெண்டாமரைப்
பூமேல் விளங்கு பதமும்
பொழுதெலாம் எண்ணும் என் பழுதெலாம் போக்கிநற்
புலமை தர வேண்டும் அம்மா
கனிதந்து மலர் தந்து கவிதந்து தொழுவோர்க்குக்
கண்தந்து காக்கும் அரசே
கலைஞான மகளென்ற நிலையான புகழ் கொண்ட
கருணைமயமான பொருளே
இனிதங்கு தடையின்றி யான்பாட நீ கேட்க
இதயம் கனிந்தருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பிறையார் சடைபித்தன் பிஞ்ஞகன் சங்கரன்
பிறவாத யாக்கை உடையோன்
பேராயிரங் கொண்ட பெருநாவலன் சிவன்
பிரமன் அறியாத மறையோன்
கறையார் கழுத்தினன் கண்ணுதல் கயற்கண்ணி
காதலன் கங்கை நாடன்
காளத்தி நாதன் கபாலி கங்காதரன்
கயிலையோன் மங்கைபாகன்
சிறையார் புனற்றில்லைச் சிற்றம்பலத்தினன்
த்ரியம்பகன் தியாகராசன்
திரிபுரம் எரித்தவன் குருபரன் ஈசன்எனச்
செப்பும்எம் அப்பனான
இறையோனும் நீயும் எம் இல்லங்கள் தோறும்
எழுந்தருள வேண்டும் அம்மா
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி
சிவகாமி தில்லை மன்றில்
தென்குமரி பகவதி திருவானைக்காவினில்
திகழும் அகிலாண்டேச்சுவரி
காரார் மதிற்கச்சி காமாட்சி அங்கயற்
கண்ணிசெந்தமிழ்மாமதுரையில்
கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளிவங் காள மண்ணில்
தாரர்சிவன் தோலும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த
தையல் அபிராமவல்லி
ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆள வலவோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சிந்தூரம் குங்குமம் செவ்வானம் அவ்வானம்
திகழ வரும்கதிரின் உதயம்
தேசு மிகு மாணிக்கம் திரு ஏறு கமலம் அச்
செங்கமலம் அஞ்சு பவழம்
மந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்
வண்டூ ரும் மலையில் நறவம்
மான்மதம் செங்குருதி போன்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறும் முத்தம்
செந்தீயின் வண்ணம் என வேய்சொல்லும் மேனியும்
செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்
எந்தாய் நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

தேறாத கவிஎனினும் மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்
சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்
ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
ஆரை நான் நொந்து கொள்வேன்
அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்
நீறாக வேந்ருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்
நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகின்றேன்
ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

வானமும் பூமியும் மாறினும் மாறாத
வாய்மை வடிவான தேவி
வழிபாடு செய்பவர் குறைபாடு தீரத்தின்ப
வாழ்வுதரும் ஆதி தேவி
தேனுமாய் அமுதுமாய்ச் சித்தத்திலே நின்று
தித்தித் தினிக்கும் தேவி
சேரரின் மார்பை இருகூறாகவே செய்யும்
திரிசூலம் ஏந்தும் தேவி
கானமும் சிற்பமும் கலைமலர் பலப்பலவும்
காணிக்கை கொள்ளும் தேவி
கற்பனையும் ஒப்பனையும் காலம் ஒரு மூன்றும்
கடந்தஎம் தேவதேவி
ஈனமொன்றண்டாத ஞானமாதேவி உனை
என் சொல்லி வாழ்த்துவோம் யாம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

வரம்பற்ற ஆற்றல் வரப்பெற்ற பண்டனை
மற்றும் அவன் பெற்ற மகனை
மாறுகொள் விடங்கனை மடம்படு விசுக்கி றனை
மதுகையிடப்பன் மயிடனை
உரம் பெற்ற சும்பனை நிசும்பனை நரகனை
உதிரபீசன் மரபினை
ஒழிவிலாச் சண்டனை முண்டனை இரணியனை
உணர்வற்ற தக்கன் தன்னை
சிரம்பத்து பெற்றவனைத் தேரேறி மாவேறிச்
செற்ற எம் வெற்றி மயிலே
சேவிக்கும் அடியாரை வாழ்விக்கும் ஆசையால்
செங்கோல் பிடித்த அழகை
இரும்புவி புரந்தருள் பெரும்பெயர் மடந்தை உனை
என் சொல்லி போற்று வோம்யாம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்
வேயின் குழல் முழவு வீணைநாதச் சுவரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்
ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பருக்குக் கோடி நலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்
ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

பொன்னும் நீ நான் தேடும் பொருளும் நீ புகழும் நீ
போகங்கள் யாவும் நீயே
புறமும் நீ அகமும் நீ புலியெங்கும் நான் காணும்
பொலிவு நீ போதம் நீயே
முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவிலா
முழுமை நீ ஞானம் நீயே
முதுமை நீ இளமை நீ மோசம் நீ தாகம் நீ
மோனம் நீ கானம் நீயே
மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று
மனமுருகி நின்றதெல்லாம்
வஞ்சமோ என்துயர் கொஞ்சமோ இவ்வாறு
மரப்பதுவும் ஒரு நெஞ்சமோ
இன்னும் நீ சுற்றும் இரங்கா திருந்திடில்
என்னுயிர் இனி மிஞ்சுமோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

என்ன கவி பாடினால் உன் மனது மாறுமோ
என்மீது கருனை வருமோ
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமா
சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ
சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்
சொல்லுபவர் யாருமில்லையோ
சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ
செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ
இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்
கனலும் உன் வடிவெனினும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்
ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர் சுமந்தோம்
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்
போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்த்தேடி எங்குபெறுவோம்
ஏற்றருள வேண்டும் என் இதயத்தை எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையொடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை
முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாகி உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை
உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரெழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
இற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

கொற்றத் தமிழ்க்கம்பன் குற்றம் மறைக்கநீ
கொட்டிக் கிழங்குவிற்றாய்
கூறுதமிழ் ஏட்டினை நீரிலும் நெருப்பிலும்
குலையாமல் காத்து நின்றாய்
வெற்றித் தமிழ்க்காள மேகமென வீணனையும்
மேதையாய் நீஆக் கினாய்
மெய்ஞானி சொற்றமிழை மெய்பிக்க வானத்தில்
வெண்ணிலவு தோற்றுவித்தாய்
ஒன்றித் தலம்விட்டு வள்ளலார் பசிதீர
ஓடோடிச் சோறு தந்தாய்
உத்தமக் கவியரசன் குருபரன் முன்பு நீ
ஒளிசிந்த நடைப யின்றாய்
இற்றைக் கென் தமிழோடும் சற்றுவிளையாடி நீ
இன்னருள் புரிய வருவாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

நாள் என்றும் கோள் என்றும் நாங்கள் அஞ்சோம் அந்த
நமனையும் ஏவல் கொள்வோம்
நாடாளும் அரசர்க்கும் ஈடாக மேலாக
ஞாலமுழுதாள வல்லோம்
வாள் ஒன்று கண்ணுடைய மங்கை நல் லாட்கன்றி
மற்றையார்க்கு அடிமை செய்யோம்
வறுமையும் கொடுமையும் மடமையும் அகலவே
மாசக்தி பேர்சொல்லுவோம்
தாள் ஒன்று தொண்டரைத் தாங்கும் பராசக்தி
தன்மக்கள் நாங்கள் எனவே
தறுகண்மை குன்றாத பெருமக்கள் கூட்டத்தில்
சாரும் நாள் எந்த நாளோ
யாளியும் விடையுமே ஊர்தியாய் அண்டங்கள்
யாவும் பரந்தருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

கற்பூர சோதியில் கமலால யத்தினில்
கயிலாய மலை மீதினில்
கந்தருவர் கின்னரர் கணநாதர் சித்தர்கள்
கண்டு தொழ நின்ற பொருளே
வெற்பூறு கங்கையை வில்வமுடன் ஆத்தியை
வெள்ளேருக் கைத்தும் பையை
மிடைகொன்றை பாம்பினோடு பிறைசூடுவான் பங்கில்
மேவித்தழைத்த எழிலே
மற்போர் துணிந்த மாயிடன் தலைமீது
மனைபோற்ற ஏறு திறலே
மாறுபடு சூரர் குலம் நீறு படமேல்தந்து
வாகைமலர் சூடும் அருளே
எற்பொருது மேலெலும் இளஞாயிறே எங்கள்
ஏழமை தவிர்த்த அரசே
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

சரவணா சண்முகா சக்திவடி வேலா
சடானனா மயில் வாகனா
தணிகாச்சலா அருணகிரிகாதலா செந்
தமிழ்ச் சுவை பழுத்த அழகா
குருபரா கந்தா குகா கார்த்திகேயா
குறத்திமணவாள முருகா
கும்பிடும் அடியவர் வெந்துயர் களைகின்ற
கொற்றவை பெற்ற குமரா
கருதிவரும் யாவினையும் உறுதிபெற வேநல்கும்
கருணைமய மான தலைவா
களங்கண்ட வீரா நலந்தந்து காவெண்
கடம்ப மலர்மார்பா என
இருபோதும் தொழுவோர்க்கு இனிபோதும் போதும் என
ஈவோனுக்கு அன்னை நீ காண்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

எனையாளும் அன்னை நின் இருபாதகமலங்கள்
இரவி போல் ஒளி வீசுமாம்
எதிரான தக்கனை இரணியனை எச்சனை
எரியேற்றிமுறை காக்குமாம்
தனைநாளும் மறவாமல் நினைவார்தம் குரல்கேட்டுத்
தாழாது எழுந்தோடுமாம்
தலைமாலை சூடி ஒரு கொலைவாளும் ஏந்தியே
சங்கார நடமாடுமாம்
வினையோடு பகைபிணிகள் வேதனை தவிர்க்கின்ற
மெய்யான துணையாகுமாம்
மேலுக்கு மேலான வெற்றிப் பதங்கட்கு
வேறேது நிகராகுமாம்
இனைய என எழுதரிய புகழுடைய நினதடிகள்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

எனையாளும் அன்னை நின் இருபாதகமலங்கள்
இரவி போல் ஒளி வீசுமாம்
எதிரான தக்கனை இரணியனை எச்சனை
எரியேற்றிமுறை காக்குமாம்
தனைநாளும் மறவாமல் நினைவார்தம் குரல்கேட்டுத்
தாழாது எழுந்தோடுமாம்
தலைமாலை சூடி ஒரு கொலைவாளும் ஏந்தியே
சங்கார நடமாடுமாம்
வினையோடு பகைபிணிகள் வேதனை தவிர்க்கின்ற
மெய்யான துணையாகுமாம்
மேலுக்கு மேலான வெற்றிப் பதங்கட்கு
வேறேது நிகராகுமாம்
இனைய என எழுதரிய புகழுடைய நினதடிகள்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே (ஓம் சக்தி)

விநாயகர் காப்பு
மாதவன் சீதரன்
மாலினி கபாலினி
மாசக்தி கௌமாரி
மூவர்க்கும் தேவர்க்கும்
நோக்கும் திசைதோறும்
பனிதங்கு நிலவு போல்
பிரயார் சடைப்பித்தன்
சீரார் பெருந்துறையில்
சிந்தூரம் குங்குமம்
தேறாத கவியெனினும்
வானமும் பூமியும்
வரம்பற்ற ஆற்றல்
ஆயிரம் இதழ்கொண்ட
பொன்னும் நீ நான்
என்ன கவி பாடினால்
காற்றை படைத்தவள்
நெற்றியில் நீதந்த
கொற்றத் தமிழ்க்கம்பன்
நாள் என்றும் கோள்
கற்பூர சோதியில்
சரவணா சண்முகா
என்னை ஆளும் அன்னை