சரணம் சரணம் கணபதியே

சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள் வாய் கணபதியே
(1)

அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்ப ஜோதியே கணபதியே (2)

கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே (3)

ஆவணித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடி பணிந்தோம் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே, (4)