திருப்புகழ் 1124 அகர முதலென (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1124 Agaramudhalena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன – தத்ததனதான

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை – எப்பொருளுமாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு – மற்றதொருகாலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ – ரித்தபெருமானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது – ணர்த்தியருள்வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத – தத்ததகுதீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு – டுக்கையுமியாவும்


மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக – ளத்திலொருகோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச – ளித்தபெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன – தத்ததனதான

அகரமுத லெனவுரைசெய ஐம்பந்தொர் அக்ஷரமும்
அகிலகலைகளும் வெகுவிதங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்குந்தனிப்பொருளை – எப்பொருளும் ஆய

அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை துரிய
முடிவை அடிநடுமுடிவில் துங்கந்தனை அணுவினின் சிறிய
அணுவை மலமு நெஞ்சுங் குணத்ரயமும் – அற்றதொரு காலம்


நிகழும் வடிவினை முடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறைவு ஒழிவற நிறைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதை விசும்பின்புரத்ரயம் – எரித்தபெருமானும்

நிருப குருபர குமர என்றென்று பத்திகொடு
பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழியடிமையும் விளங்கும்படிக்கு இனிது – உணர்த்தியருள்வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத – தத்ததகுதீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் – உடுக்கையுமியாவும்

மொகுமொகென அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர்
அலகை கரணமிட உலகெங்கும் ப்ரமிக்க நடமுடுகு
பயிரவர் பவுரி கொண்டின்புற படுகளத்திலொரு – கோடி


முதுகழுகு கொடிகருடன் அங்கம்பொரக்குருதி
நதிபெருக வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்று இந்தி ரற்கரசளித்த – பெருமாளே.

English

agaramudha lenauraisey aimbandho raksharamum
akilakalai gaLumveguvi dhankoNda thaththuvamum
aparimitha surudhiyuma danguntha nipporuLai – epporuLumAya

aRivaiaRi bavaraRiyum inbantha naiththuriya
mudivaiadi nadumudivil thungantha naisiRiya
aNuvaiaNu vininmalamu nenjungu Nathrayamu – matradhorukAlam

nigazhumvadi vinaimudivi londrendri ruppadhanai
niRaivukuRai vozhivaRani Raindhengu niRpadhanai
nigarpagara ariyadhaivi sumbinpu rathrayame – riththaperumAnum

nirupaguru parakumara endrendru baththikodu
paravaaru Liyamavuna manthrantha naippazhaiya
ninadhuvazhi adimaiyumvi Langumpa dikinidhu – NarthiaruLvAyE

thaguthagugu thaguthagugu thanthandha kuththakugu
tigutigugu tigutigugu tiNdiNdi kukkudigu
thaguthageNa geNasegutha thandhandha riththagudha – thaththathagutheedhO

thanathanana thanathanana thandhandha naththathana
dududududu dududududu duNduNdu duttududu
tharararara ririririri endrendri dakkaiyumu – dukkaiyumiyAvum

mogumogena adhiramudhi raNdampi Lakkanimir
alagaikara Namidaula gengumbra mikkanata
mudugubayi ravarpavuri koNdinbu Rappaduka – LaththilorukOdi

mudhukazhugu kodigaruda nangampo rakkurudhi
nadhiperuga vegumukaka vandhangaL nirththamida
murasadhira nisisararai vendrindhi raRkarasa – LiththaperumALE.

English Easy Version

agara mudhalena uraisey aimbandhor aksharamum
akila kalaigaLum vegu vidhankoNda thaththuvamum
aparimitha surudhiyum adangun thanipporuLai – epporuLu mAya

aRivai aRibavar aRiyum inban thanai thuriya
Mudivai adinadu mudivil thungan thanai siRiya
aNuvai aNuvinin malamu nenjum guNathrayamum – atradhoru kAlam

nigazhum vadivinai mudivil ondrendr iruppadhanai
niRaivu kuRai vozhivaRa niRaindhengu niRpadhanai
nigarpagara ariyadhai visumbin purathrayam eriththa – perumAnum

nirupaguru parakumara endrendru baththikodu
Parava aruLiya mavuna manthran thanai pazhaiya
ninadhuvazhi adimaiyum viLangumpadiku inidh uNarthi – aruLvAyE

thaguthagugu thaguthagugu thanthandha kuththakugu
tigutigugu tigutigugu tiNdiNdi kukkudigu
thaguthageNa geNachegutha thandhandha riththagudha – thaththathagu theedhO

thanathanana thanathanana thandhandha naththathana
dududududu dududududu duNduNdu duttududu
tharararara ririririri endrendru idakkaiyum – udukkaiyum iyAvum

mogumogena adhira mudhir aNdam piLakka nimir
alagai karaNamida ulagengum bramikka nata mudugu
bayiravar pavuri koNdinbuRa padu kaLaththiloru – kOdi


mudhukazhugu kodigarudan angampora kurudhi
Nadhiperuga vegumuka kavandhangaL nirththamida
Murasadhira nisisararai vendrindhiraRk aras aLiththa – perumALE.