Thiruppugal 1223 Ezhundhidum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
தனந்தனந் தத்தத் – தனதானம்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
திரண்டுகண் பட்டிட் – டிளையோர்நெஞ்
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
டிணங்குபொன் செப்புத் – தனமாதர்
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
றணைந்துபின் பற்றற் – றகல்மாயத்
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
டலைந்தலைந் தெய்த்திட் – டுழல்வேனோ
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
துடன்பெருங் கைக்குட் – படவாரிப்
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
கிதஞ்செய்தொன் றத்திக் – கிளையோனே
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
சலம்பிளந் தெற்றிப் – பொருசூரத்
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
தடிந்திடுஞ் சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
தனந்தனந் தத்தத் – தனதானம்
எழுந்திடும் கப்புச் செழும் குரும்பைக்கு ஒத்து
இரண்டு கண் பட்டு – இட்டு இளையோர்
நெஞ்சு இசைந்து இசைந்து எட்டிக் கசிந்து அசைந்து இட்டு இட்டு
இணங்கு பொன் செப்புத் – தன மாதர்
அழுங்கல் அங்கத்துக் குழைந்து மன் பற்று உற்று
அணைந்து பின் பற்று அற்று – அகல் மாயத்து
அழுங்கு நெஞ்சு உற்றுப் புழங்கு புண்பட்டிட்டு
அலைந்து அலைந்து எய்த்திட்டு – உழல்வேனோ
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன்
பெரும் கைக்குள் – பட வாரிப்
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு
இதம் செய்து ஒன்று அத்திக்கு – இளையோனே
தழைந்து எழும் தொத்துத் தடம் கை கொண்டு அப்பிச்
சலம் பிளந்து எற்றிப் – பொருசூர்
அத் தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து இடம் புக்குத்
தடிந்திடும் சொக்கப் – பெருமாளே.
English
ezhunthidung kappuc chezhungurum paikkoth
thiraNdukaN pattit – tiLaiyOrnen
jisainthisain thettik kasinthasain thittit
tiNangupon sepputh – thanamAthar
azhungkalang kaththuk kuzhainthuman patRut
RaNainthupin patRat – RakalmAyath
thazhungunen jutRup puzhungupuN pattit
talainthalain theyththit – tuzhalvEnO
pazhamperun thiththip puRungkarum pappath
thudanperung kaikkut – padavArip
paranthezhun thoppaik karunthimun paththark
kithamcheython Raththik – kiLaiyOnE
thazhainthezhun thoththuth thadangaikoN dappic
chalampiLan thetRip – porucUrath
thadamperung kokkaith thodarnthidam pukkuth
thadinthidunj chokkap – perumALE.
English Easy Version
ezhunthidum kappuc chezhum kurumpaikku oththu
iraNdu kaN pattu – ittu iLaiyOr
nenju isainthu isainthu ettik kasinthu asainthu ittu ittu
iNangu pon sepputh – thana mAthar
azhungal angaththuk kuzhainthu man patRu utRu
aNainthu pin patRu atRu – akal mAyaththu
azhungu nenju utRup puzhangu puNpattittu
alainthu alainthu eyththittu – uzhalvEnO
pazham perum thiththippu uRum karumpu
appaththudan perum kaikkuL – pada vArip
paranthu ezhum thoppaikku arunthi mun paththarkku itham
cheythu onRu aththikku – iLaiyOnE
thazhainthu ezhum thoththuth thadam kai koNdu appic
chalam piLanthu etRip – porucUr
ath thadam perum kokkaith thodarnthu idam pukkuth
thadinthidum chokkap – perumALE.,