Thiruppugal 1263 Biramanumvirakodu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தம் – தனதான
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
பேணிக் கரங்கொண் – டிருகாலும்
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
பேதித் தளந்தம் – புவியூடே
வரவிட வருமுட லெரியிடை புகுதரு
வாதைத் தரங்கம் – பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுரு கனுமென
வாழ்க்கைக் கொரன்புந் – தருவாயே
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப் புடன்சென் – றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
னாண்மைத் தனங்கொண் – டெழும்வேலா
இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
யீசர்க் கிடுஞ்செந் – தமிழ்வாயா
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
ஏழைக் கிரங்கும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தம் – தனதான
விரகொடு பிணிவினை இடர் கொடு .
பேணிக் கரம் கொண்டு – இரு காலும்
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி
பேதித்து அளந்து அம் – புவி ஊடே
பிரமனும் வர விட வரும் உடல் எரி இடை புகு தரு
வாதைத் தரங்கம் – பிறவா முன்
மரகத மயில் மிசை வரு முருகனும் என
வாழ்க்கைக்கு ஓர் அன்பும் – தருவாயே
அரு வரை தொளை பட அலை கடல் சுவறிட
ஆலிப்புடன் சென்ற – அசுரேசர்
அனைவரும் மடி உற அமர் பொருத அழகுடன்
ஆண்மைத் தனம் கொண்டு – எழும் வேலா
இரு வினை அகலிட எழில் உமை இடம் உடை
ஈசர்க்கு இடும் செம் – தமிழ் வாயா
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும்
ஏழைக்கு இரங்கும் – பெருமாளே.
English
biramanum virakodu piNivinai yidarkodu
pENik karamkoN – dirukAlum
peRanimir kudilena vuRavuyir pukamathi
pEthith thaLantham – puviyUdE
varavida varumuda leriyidai pukutharu
vAthaith tharangam – piRavAmun
marakatha mayilmisai varumuru kanumena
vAzhkkaik koranpun – tharuvAyE
aruvarai thoLaipada alaikadal suvaRida
Alip pudansen – RasurEsar
anaivaru madivuRa amarporu thazhakuda
nANmaith thanamkoN – dezhumvElA
iruvinai yakalida ezhilumai yidamudai
yeesark kidumchen – thamizhvAyA
iyalpala kalaikodu isaimozhi pavarinum
Ezhaik kirangum – perumALE.
English Easy Version
virakodu piNivinai idar kodu
pENik karam koNdu – iru kAlum
peRa nimir kudil ena uRa uyir puka mathi
pEthiththu aLanthu am – puvi UdE
biramanum vara vida varum udal eri idai puku tharu
vAthaith tharangam – piRavA mun
marakatha mayil misai varu murukanum ena
vAzhkkaikku Or anpum – tharuvAyE
aru varai thoLai pada alai kadal suvaRida
Alippudan senRa – asurEsar
anaivarum madi uRa amar porutha azhakudan
ANmaith thanam koNdu – ezhum vElA
iru vinai akalida ezhil umai idam udai
eesarkku idum sem – thamizh vAyA
iyal pala kalai kodu isai mozhipavarinum
Ezhaikku irangum – perumALE.