திருப்புகழ் 17 பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்)

Thiruppugazh 17 Poruppurung

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன – தந்ததான

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் – வஞ்சமாதர்

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் – தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் – அன்புமேவும்

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் – அன்புறாதோ

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு – கந்தவேளே

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் – அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் – துன்றிநீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன – தந்ததான

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய
பிணக்கிடும் சண்டிகள் – வஞ்சமாதர்

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர்
முருக்கு வண் செம் துவர் – தந்து போகம்

அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல்
அறச் சிவந்த அம் கையில் – அன்பு மேவும்

அவர்க்கு உழன்று அங்கமும் அறத் தளர்ந்து என் பயன்
அருள் பதம் பங்கயம் அன்பு – உறாதோ

மிருத்து அணும் பங்கயன் அலரக் க(ண்)ணன் சங்கரர்
விதித்து எணும் கும்பிடு(ம்) – கந்த வேளே

மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு
மிசைக்கு இடும் செம் தமிழ் – அங்க வாயா

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கோடு
திறல் செழும் சந்து அகில் – துன்றி நீடும்

தினைப் புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை
திருப்பரம் குன்று உறை – தம்பிரானே.

English

poruppuRung kongaiyar porutkavarn thonRiya
piNakkidum saNdikaL – vanjamAthar

puyaRkuzhan Rangamazh aRaRkulan thangavir
murukkuvaN senthuvar – thanthupOkam

aruththidum singiyar tharukkidum sengayal
aRacchivan thangaiyil – anpumEvum

avarkkuzhan Rangamum aRaththaLarn thenpayan
arutpatham pangayam – anpuRAthO

miruththaNum pangayan alarkkaNan sankarar
vithiththeNum kumpidu – kanthavELE

mikuththidum vansama Naraipperun thiNkazhu
misaikkidum senthamizh – angavAyA

perukkuthaN saNpaka vanaththidam kongodu
thiRaRchezhum santhakil – thunRineedu

thinaippunam paingkodi thanaththudan senRaNai
thirupparang kunRuRai – thambirAnE.

English Easy Version

poruppu uRum kongaiyar poruL kavarnthu onRiya
piNakkidum saNdikaL – vanjamAthar

puyal kuzhanRa am kamazh aRal kulam thangu avir
murukku vaN sem thuvar – thanthu pOkam

xaruththidum singiyar tharukkidum sem kayal
aRac chivantha am kaiyil – anpu mEvum

avarkku uzhanRu angamum aRath thaLarnthu en
payan aruL patham pangayam – anpu uRAthO

miruththu aNum pangayan alarak ka(N)Nan sankarar
vithiththu eNum kumpidu(m) – kantha vELE

mikuththidum van samaNaraip perum thiN kazhu
misaikku idum sem thamizh – anga vAyA

perukku thaN saNpaka vanam thidam kongOdu
thiRal sezhum santhu akil – thunRi needum

thinaip punam paim kodi thanaththudan senRu aNai
thirupparam kunRu uRai – thambirAnE.