திருப்புகழ் 18 மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்)

Thiruppugazh 18 Mandralang

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன – தனதான

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் – குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன – தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு – விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் – அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி – பவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் – வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் – செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன – தனதான

மன்றல் அங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் – குழல்மாதர்

மண்டிடும் தொண்டை அமுது உண்டுகொண்டு அன்புமிக
வம்பிடுங் கும்பகன – தனமார்பில்

ஒன்ற அம்பு ஒன்றுவிழி கன்ற அங்கங்குழைய
உந்தியென்கின்ற மடு – விழுவேனை

சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் உன் – அடிசேராய்

பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள்
பண்டை என்பு அங்கம் – அணிபவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந்து ஐந்துகர
பண்டிதன் தம்பியெனும் – வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு
வளர் செண்பகம் பைம்பொன்மலர் – செறிசோலை

திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை – பெருமாளே.

English

manRalang konthumisai thenthanath thenthanena
vaNdinang kaNduthodar – kuzhalmAthar

maNdidun thoNdaiyamu thuNdukoN danpumika
vampidung kumpakana – thanamArpil

onRaam ponRuvizhi kanRaang kangkuzhaiya
unthiyen kinRamadu – vizhuvEnai

unsilam pungkanaka thaNdaiyung kiNkiNiyum
oNkadam pumpunaiyum – adisErAy

panRiyang kompukama dampuyang kanjurarkaL
paNdaiyen pangkamaNi – pavarsEyE

panjarang konjukiLi vanthuvan thainthukara
paNdithan thampiyenum – vayalUrA

senRumun kunRavarkaL thanthapeN koNduvaLar
seNpakam paimponmalar – seRisOlai

thingaLum sengkathiru mangkulun thangkumuyar
thenparang kunRiluRai – perumALE.

English Easy Version

manRalang konthumisai thenthanath thenthanena
vaNdinang kaNduthodar – kuzhalmAthar

maNdidun thoNdaiyamuthuNdu koNdu anpumika
vampidung kumpakana – thanamArpil

amponRuvizhi kanRa ang kangkuzhaiya
unthiyen kinRamadu – vizhuvEnai

unsilam pungkanaka thaNdaiyung kiNkiNiyum
oNkadam pumpunaiyum – adisErAy

panRiyang kompu kamadam puyangkam surarkaL
paNdai yenp angkamaNi – pavarsEyE

panjarang konjukiLi vanthuvanthu ainthukara
paNdithan thampiyenum – vayalUrA

senRumun kunRavarkaL thanthapeN koNdu vaLar
seNpakam paimponmalar – seRisOlai

thingaLum sengkathiru mangkulun thangkumuyar
thenparang kunRiluRai – perumALE.