Thirupugal 202 Ananamugandhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதன தந்த தானன தானதன தந்த தானன
தானதன தந்த தானன – தனதான
ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
ஆரமுது கண்டு தேனென – இதழூறல்
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
ஆனையுர மெங்கு மோதிட – அபிராம
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
மாயுமனு வின்ப வாசைய – தறவேயுன்
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
வாசகம்வ ழங்கி யாள்வது – மொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
ஈடழிய வென்று வானவர் – குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
ராசதம றிந்த கோமள – வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
தோளுடைய கந்த னேவய – லியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்று லாவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதன தந்த தானன தானதன தந்த தானன
தானதன தந்த தானன – தனதான
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன
ஆரமுது கண்டு தேன் என – இதழ் ஊறல்
ஆதரவின் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என
ஆனை உரம் எங்கும் மோதிட – அபிராம
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடமில்
மாயும் மநு இன்ப ஆசை அது – அறவே உன்
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக
வாசகம் வழங்கி ஆள்வதும் – ஒரு நாளே
ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள்
ஈடு அழிய வென்று வானவர் – குல சேனை
ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர அலங்க்ருத ஆகர
ராசதம் அறிந்த கோமள – வடிவோனே
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு
தோளுடைய கந்தனே வயலியில் – வாழ்வே
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு
ஸ்வாமி மலை நின்று உலாவிய – பெருமாளே.
English
Ananamu kanthu thOLodu thOLiNaika lanthu pAlana
Aramuthu kaNdu thEnena – ithazhURal
Atharavi nuNdu vElvizhi pUsalida nanRu kANena
Anaiyura mengu mOthida – apirAma
mAnanaiya mangai mArmadu nApiyilvi zhunthu keedamil
mAyumanu vinpa vAsaiya – thaRavEyun
vArijapa thangaL nAyadi yEnmudipu nainthu pOthaka
vAsakamva zhangi yALvathu – morunALE
eenavathi panja pAthaka thAnavarpra saNda sEnaikaL
eedazhiya venRu vAnavar – kulasEnai
EvalkoLu minthra lOkava seekarava langru thAkara
rAsathama Rintha kOmaLa – vadivOnE
sOnaisoai kunRa vEduvar pEthaipayil kinRa ARiru
thOLudaiya kantha nEvaya – liyilvAzhvE
cULikaiyu yarntha kOpura mALikaipo ninji sUzhtharu
SvAmimalai ninRu lAviya – perumALE.
English Easy Version
Ananam ukanthu thOLodu thOL iNai kalanthu pAl ana Aramuthu kaNdu thEn ena – ithazh URal
Atharavin uNdu vEl vizhi pUsal ida nanRu kAN ena
Anai uram engum mOthida – apirAma
mAn anaiya mangaimAr madu nApiyil vizhunthu keedamil mAyum manu inpa Asai – athu aRavE un
vArija pathangaL nAy adiyEn mudi punainthu pOthaka vAsakam vazhangi ALvathum – oru nALE
eena athi panja pAthaka thAnavar prasaNda sEnaikaL
eedu azhiya venRu vAnavar – kula sEnai
Eval koLum inthra lOka vaseekara alangrutha Akar
rAsatham aRintha kOmaLa – vadivOnE
sOnai sori kunRa vEduvar pEthai payilkinRa ARu iru thOLudaiya kanthanE vayaliyil – vAzhvE
cULikai uyarntha kOpura mALikai pon inji sUzhtharu
SvAmi malai ninRu ulAviya – perumALE.