திருப்புகழ் 231 முறுகு காள (சுவாமிமலை)

Thiruppugal 231 Murugukala

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த – தனதான

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்த – முலைமீதே


முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி – அயராதே

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்து – னடிபேணி

அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றை – அருள்வாயே

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்ற – வடிவேலா

தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
தரணி யேழும் வலம்வ ருந்திண் – மயில்வீரா

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின் – மணவாளா


மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
வளர்சு வாமி மலைய மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த – தனதான

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ள(ம்) மயங்கி
முளரி வேரி முகை அடர்ந்த – முலை மீதே

முழுகு காதல் தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து
முகம் ஒரு ஆறு மிக விரும்பி – அயராதே

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை
அடைய வாரி மிசை பொழிந்து உன் – அடி பேணி

அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை – அருள்வாயே

தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து
தமர வேலை சுவற வென்ற – வடி வேலா

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர் அமுதம் உண்டு
தரணி ஏழும் வலம் வரும் திண் – மயில் வீரா

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து
வலிய காவல் புனை அணங்கின் – மணவாளா

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி
வளர் சுவாமி மலை அமர்ந்த – பெருமாளே.

English

muRuku kALa vidama yinRa irukaN vEli nuLama yangi
muLari vEri mukaiya darntha – mulaimeethE

muzhuku kAthal thanaima Ranthu parama njAna voLisi Ranthu
mukamo rARu mikavi rumpi – ayarAthE

aRuku thALi naRaiya vizhntha kuvaLai vAsa malarka ranthai
adaiya vAri misaipo zhinthu – nadipENi

avasa mAki yuruku thoNda rudana thAki viLaiyu manpi
nadimai yAku muRaimai yonRai – aruLvAyE

thaRukaN veerar thalaiya rinthu porutha cUra nudalpi Lanthu
thamara vElai suvaRa venRa – vadivElA

tharaLa mUra lumaima danthai mulaiyi lAra amutha muNdu
tharaNi yEzhum valamva runthiN – mayilveerA

maRuvi lAtha thinaivi Laintha punamvi dAma lithaNi runthu
valiya kAval punaiya Nangin – maNavALA

maruvu njAzha laNise runthi yadavi cUtha vanane rungi
vaLarsu vAmi malaiya marntha – perumALE.

English Easy Version

muRuku kALa vidam ayinRa iru kaN vElin u(L)La(m) mayangi
muLari vEri mukai adarntha – mulai meethE

muzhuku kAthal thanai maRanthu parama njAna oLi siRanthu
mukam oru ARu mika virumpi – ayarAthE

aRuku thALi naRai avizhntha kuvaLai vAsa malar karanthai
adaiya vAri misai pozhinthu un – adi pENi

avasamAki uruku thoNdar udan athAki viLaiyum anpin
adimaiyAkum muRaimai onRai – aruLvAyE

thaRukaN veerar thalai arinthu porutha cUran udal piLanthu
thamara vElai suvaRa venRa – vadi vElA

tharaLam Ural umai madanthai mulaiyil Ar amutham uNdu
tharaNi Ezhum valam varum thiN – mayil veerA

maRu ilAtha thinai viLaintha punam vidAmal ithaNil irunthu
valiya kAval punai aNangin – maNavALA

maruvu njAzhal aNi serunthi adavi cUtha vana(m) nerungi
vaLar suvAmi malai amarntha – perumALE.