திருப்புகழ் 375 கமரி மலர்குழல் (திருவருணை)

Thiruppugal 375 Kamarimalarkuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன – தனதான

கமரி மலர்குழல் சரிய புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை – நெகிழ்மாதர்

கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள் – மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக – ளிதழூறல்

திரையி லமுதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட – அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர – எனதாளங்

குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமட டமடம டமட டமவென
குமுற திமிலைச லரிகி னரிமுத – லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர் பரிகரி யிரத முடைபட – விடும்வேலா

அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன – தனதான

கம அரி மலர் குழல் சரிய புளகித
கனக தன கிரி அசைய பொரு விழி
கணைகள் என நுதல் புரள துகில் அதை – நெகிழ் மாதர்

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி
பரவ இணை குழை அசைய நகை கதிர்
கனக வளை கல நடைகள் பழகிகள் – மயில் போல

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில்
அலைய விலை முலை தெரிய மயல் கொடு
திலத மணிமுக அழகு சுழலிகள் – இதழ் ஊறல்

திரையில் அமுதென கழைகள் பல சுளை
எனவும் அவர் மயல் தழுவும் அசடனை
திருகு புலை கொலை கலிகள் சிதறிட – அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர – என தாளம்

குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி
டமட டமடம டமட டம என
குமுற திமிலை சலரி கி(ன்)னரி முதல் – இவை பாட

அமரர் முநிவரும் அயனும் அனைவரும்
மதுகை மலர் கொடு தொழுது பதம் உற
அசுரர் பரி கரி இரதமும் உடைபட – விடும் வேலா

அகில புவனமொடு அடைய ஒளி பெற
அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர்
அருண கிரி குற மகளை மருவிய – பெருமாளே.

English

kamari malarkuzhal sariya puLakitha
kanaka thanakiri yasaiya poruvizhi
kaNaika Lenanuthal puraLa thukilathai – nekizhmAthar

kariya maNipura Lariya kathiroLi
parava iNaikuzhai yasaiya nakaikathir
kanaka vaLaikala nadaikaL pazhakikaL – mayilpOlath

thimiru mathapuzhu kozhuka theruvini
lalaiya vilaimulai theriaya mayalkodu
thilatha maNimuka azhaku suzhalika – LithazhURal

thiraiyi lamuthena kazhaikaL palasuLai
yenavu mavarmayal thazhuvu masadanai
thiruku pulaikolai kalikaL sithaRida – aruLthArAy

kumara gurupara kumara gurupara
kumara gurupara kumara gurupara
kumara gurupara kumara gurupara – enathALang

kuraisey murasamo dariya virutholi
damada damadama damada damavena
kumuRa thimilaicha lariki narimutha – livaipAda

amarar munivaru mayanu manaivaru
mathukai malarkodu thozhuthu pathamuRa
asurar parikari yiratha mudaipada – vidumvElA

akila puvanamo dadaiya voLipeRa
azhaku saraNmayil puRama tharuLiyo
raruNa kirikuRa makaLai maruviya – perumALE.

English Easy Version

kama ari malar kuzhal sariya puLakitha
kanaka thana kiri asaiya poru vizhi
kaNaikaL ena nuthal puraLa thukil athai – nekizh mAthar

kariya maNi puraLa ariya kathir oLi
parava iNai kuzhai asaiya nakai kathir
kanaka vaLai kala nadaikaL pazhakikaL – mayil pOla

thimiru matha puzhuku ozhuka therivinil
alaiya vilai mulai theriya mayal kodu
thilatha maNimuka azhaku suzhalikaL – ithazh URal

thiraiyil amuthena kazhaikaL pala suLai
enavum avar mayal thazhuvum asadanai
thiruku pulai kolai kalikaL sithaRida – aruLthArAy

kumara gurupara kumara gurupara
kumara gurupara kumara gurupara
kumara gurupara kumara gurupara – ena thALam

kurai sey murasamodu ariya viruthu oli
damada damadama damada dama ena
kumuRa thimilai chalari ki(n)nari muthal – ivai pAda

amarar munivarum ayanum anaivarum
mathukai malar kodu thozhuthu patham uRa
asurar pari kari irathamum udaipada – vidum vElA

akila puvanamodu adaiya voLi peRa
azhaku saraN mayil puRam athu aruLi or
aruNa kiri kuRa makaLai maruviya – perumALE.