திருப்புகழ் 42 கருப்பம் தங்கு (திருச்செந்தூர்)

Thirupugal 42 karuppamthangku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் – தனதானா

கருப்பந்தங் கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
களைக்கண்டங் கவர்ப்பின்சென் – றவரோடே

கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் – தடுமாறிச்

செருத்தண்டந் தரித்தண்டம்
புகத்தண்டந் தகற்கென்றுந்
திகைத்தந்திண் செகத்தஞ்சுங் – கொடுமாயும்

தியக்கங்கண் டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன் பதத்தின்பந் – தருவாயே

அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண்
பனைத்தும்பொன் றிடக்கன்றுங் – கதிர்வேலா

அணிச்சங்கங் கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந் திலிற்றங்குங் – குமரேசா

புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
புதுக்குங்கங் கையட்குந்தஞ் – சுதனானாய்

புனைக்குன்றந் திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் – தனதானா

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு
அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களைக்
கண்டு அங்கு அவர்ப் பின் சென்று – அவரோடே

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும்
துவக்கு உண்டும் பிணக்கு உண்டும்
கலிப்பு உண்டும் சலிப்பு உண்டும் – தடுமாறி

செருத் தண்டம் தரித்து அண்டம்
புகத் தண்டு அந்தகற்கு என்றும்
திகைத்து அம் திண் செகத்து அஞ்சும் – கொடு மாயும்

தியக்கம் கண்டு உயக் கொண்டு
என் பிறப்(பு) பங்கம் சிறைப் பங்கம்
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் – தருவாயே

அருக்கன் சஞ்சரிக்கும் தெண்
திரைக் கண் சென்று அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிடக் கன்றும் – கதிர்வேலா

அணிச் சங்கம் கொழிக்கும் தண்டு
அலைப் பண்பு எண் திசைக்கும்
கொந்தளிக்கும் செந்திலில் தங்கும் – குமரேசா

புரக்கும் சங்கரிக்கும்
சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் – சுதன் ஆனாய்

புனக் குன்றம் திளைக்கும் செம்
தினைப் பைம்பொன் குறக் கொம்பின்
புறத் தண் கொங்கையில் துஞ்சும் – பெருமாளே.

English

karuppanthang kiraththampong
karaippuNkoN durukkumpeN
kaLaikkaNdang kavarppinsen – RavarOdE

kalappuNdunj siluppuNdun
thuvakkuNdum piNakkuNdung
kalippuNdunj chalippuNdun – thadumARic

cheruththaNdan thariththaNdam
pukaththaNdan thakaRkenRun
thikaiththanthiN sekaththanjum- kodumAyum

thiyakkangaN duyakkoNden
piRappanganj siRaippanganj
chithaiththunRan pathaththinpan – tharuvAyE

arukkansanj charikkuntheN
diraikkaNsen RarakkanpaN
panaiththumpon RidakkanRum – kathirvElA

aNicchangam kozhikkunthaN
dalaippaNpeN disaikkumkon
thaLikkumchen thilitRangum- kumarEsA

purakkumsan karikkumsan
kararkkumsan kararkkinpam
puthukkumgan gaiyatkuntham – suthanAnAy

punaikkunRan thiLaikkumchen
thinaippaimpon kuRakkompin
puRaththaNkon gaiyitRunjum – perumALE.

English Easy Version

karuppam thangu iraththam pongu
araippuN koNdu urukkum peNkaLaik
kaNdu angu avarap pin senRu – avarOdE

kalappu uNdum siluppu uNdum
thuvakku uNdum piNakku uNdum
kalippu uNdum salippu uNdum – thadumARi

seruth thaNdam thariththu aNdam
pukath thaNdu anthakaRku enRum
Thikaiththu am thiN sekaththu anjum – kodu mAyum

thiyakkam kaNdu uyak koNdu
en piRap(pu) pangam siRaip pangam
sithaiththu unRan pathaththu inpam – tharuvAyE

arukkan sanjarikkum theN
thiraik kaN senRu arakkan paNpu
anaiththum ponRidak kanRum – kathirvElA

aNic changam kozhikkum thaNdu
alaip paNpu eN thisaikkum konthaLikkum
senthilil thangum – kumarEsA

purakkum sankarikkum sankararkkum
sankararkku inpam
puthukkum kangaiyatkum tham – suthan AnAy

punak kundRam thiLaikkum sem
thinaip paimpon kuRak kompin
puRath thaN kongaiyil thunjum – perumALE.