திருப்புகழ் 536 ககனமும் அநிலமும் (வள்ளிமலை)

Thiruppugal 536 Gaganamumanilamum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த – தனதான

ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி – ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை – சுமவாதே

யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு – மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க – அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டி – இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற – பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்தி – கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த – தனதான

ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம் அமை
கள்ளப் புலாற் – கிருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை – சுமவாதே

யுகஇறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள்
உள்ளக்கண் நோக்கும் – அறிவூறி

ஒளிதிகழ் அருவுருவெனு மறை யிறுதியில்
உள்ளத்தை நோக்க – அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பிராட்டி – இறைகாணா

விடதர குடில சடிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற – பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலி புன
வள்ளிக் குலாத்தி – கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த – பெருமாளே

English

gaganamu manilamu manalpunal nilamamai
kaLLap pulARki – rumiveedu

kanalezha mozhitharu sinamena madhamigu
kaLvaiththa thORpai – sumavAdhE

yuga iRu dhigaLilum iRudhiyi loruporuL
uLLakka NOkkum – aRivURi

oLithiga zharuvuru venumaRai yiRudhiyil
uLLaththai nOkka – aruLvAyE

mrugamadha parimaLa vigasitha naLinanaL
vellaippirAtti – iRaikANA

vidathara kudilasa dilamisai vegumuka
veLLaththai yEtra – padhivAzhvE

vaguLamu muguLitha vazhaigaLu malipuna
vaLLikku lAththi – girivAzhum

vanasarar marabinil varumoru marakatha
vaLLikku vAyththa – perumALE.

English Easy Version

gaganamu manilamu manalpunal nilamamai
kaLLap pulARki – rumiveedu

kanalezha mozhitharu sinamena madhamigu
kaLvaiththa thORpai – sumavAdhE

yuga iRudhigaLilum iRudhiyil oruporuL
uLLakka NOkkum – aRivURi

oLithigazharuvuru venumaRai yiRudhiyil
uLLaththai nOkka – aruLvAyE

mrugamadha parimaLa vigasitha
naLinanaL vellaippirAtti – iRaikANA

vidathara kudilasa dilamisai vegumuka
veLLaththai yEtra – padhivAzhvE

vaguLamu muguLitha vazhaigaLu malipuna
vaLLik kulAththi – girivAzhum

vanasarar marabinil varumoru marakatha
vaLLikku vAyththa – perumALE