திருப்புகழ் 538 குடிவாழ்க்கை (வள்ளிமலை)

Thiruppugal 538 Kudivazhkkai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன – மொழியார்கள்

குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை – யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் – கொடுபோகி

இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை – யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த – குமரேசா

வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல – மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை – தரும்வாழ்வே

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான

குடிவாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன – மொழியார்கள்

குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை – உணராதே

இட நாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் – கொடுபோகி

இடுகாட்டில் என்னை எரியூட்டு முன் உன்
இருதாட்கள் தம்மை – உணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி
மயில்மேல் திகழ்ந்த – குமரேசா

வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலை காத்த நல்ல – மணவாளா

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள்போற்றும் வண்மை – தரும்வாழ்வே

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே

English

kudivAzhkkai annai manaiyatti piLLai
kuyil pOlpra sanna – mozhiyArgaL

kulam vAyththa nalla dhanamvAyththa dhenna
guruvArththai thannai – uNarAdhE

idanAtkaL veyya namaneetti thoyya
idarkUtta innal – kodupOgi

idukAttil ennai eriyUttu munnun
iruthAtkaL thammai – uNarvEnO

vadanAttil veLLi malai kAththu puLLi
mayilmEl thigazhndha – kumarEsA

vadivAtti vaLLi adipOtri vaLLi
malai kAththa nalla – maNavALA

adi nAtkkaL seydha pizhai neekki ennai
aruLpOtrum vaNmai – tharumvAzhvE

adipOtri alli mudisUtta valla
adiyArkku nalla – perumALE.

English Easy Version

kudivAzhkkai annai manaiyatti piLLai
kuyil pOlpra sanna – mozhiyArgaL

kulam vAyththa nalla dhanam vAyththa dhenna
guruvArththai thannai – uNarAdhE

idanAtkaL veyya namaneetti thoyya
idarkUtta innal – kodupOgi

idukAttil ennai eriyUttu munnun
iruthAtkaL thammai – uNarvEnO

vadanAttil veLLi malai kAththu puLLi
mayilmEl thigazhndha – kumarEsA

vadivAtti vaLLi adipOtri vaLLi
malai kAththa nalla – maNavALA

adi nAtkkaL seydha pizhai neekki ennai
aruLpOtrum vaNmai – tharumvAzhvE

adipOtri alli mudisUtta valla
adiyArkku nalla – perumALE