திருப்புகழ் 591 துஞ்சு கோட்டி (திருச்செங்கோடு)

Thiruppugal 591 Thunjukotti

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் – தனதான

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் – திரிமானார்

தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் – துழலாதே

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் – கிடையாநீ

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் – பெறுவேனோ

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் – துடையோனே

வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் – திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் – புணர்வோனே

கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் – தனதான

துஞ்சு கோட்டிச் சுழல் கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக்
கொண்டு அணாப்பித் துலக்கம் சீர்த்துத் – திரிமானார்

தொண்டை வாய்ப் பொன் கருப்பன் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்கும் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழில் பண்டு ஆட்டத்து – உழலாதே

கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டிக்
கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றைக்
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்றக் – கிடையா நீ

கண்டு வேட்டுப் பொருள் கொண்டாட்டத்து
இன்ப வாக்யத்து எனக்கும் கேட்கத்
தந்து காத்துத் திருக் கண் சாத்தப் – பெறுவேனோ

வஞ்சமாய்ப் புக்கு ஒளிக்கும் சூல் கைத்
துன்று சூர்ப் பொட்டு எழச் சென்று ஓட்டிப்
பண்டு வாட்குள் களிக்கும் தோள் கொத்து – உடையோனே

வண்டு பாட்டு உற்று இசைக்கும் தோட்டத்
தண் குராப் பொன்பு உரக் கும்பு ஏற்றித்
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து – இளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித் தண் சேல் கண்
குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனம் பைம் காட்டில் – புணர்வோனே

கொங்கு உலாத்தித் தழைக்கும் காப் பொன்
கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் – பெருமாளே

English

thunju kOttic chuzhaRkaN kAttik
kongai nOkkap palarkkung kAttik
koNda NAppith thulakkanj cheerththuth – thirimAnAr

thoNdai vAyppoR karuppanj chAtRaith
thanthu sErththuk kalakkun thUrththath
thunpa vAzhkkaith thozhiRpaN dAttath – thuzhalAthE

kanjam vAyththit tavarkkung kUttik
kanRu mEyththit tavarkkung kUtRaik
kanRa mAyththit tavarkkun thOtRak – kidaiyAnee

kaNdu vEttup porutkoN dAttath
thinpa vAkyath thenakkung kEtkath
thanthu kAththuth thirukkaN sAththap – peRuvEnO

vanja mAyppuk koLikkunj cURkaith
thunRu cUrppot tezhacchen ROttip
paNdu vAtkut kaLikkun thOtkoth – thudaiyOnE

vaNdu pAttut Risaikkun thOttath
thaNku rAppoR purakkum pEtRith
thoNdar kUttath thirukkun thOtRath – thiLaiyOnE

konju vArththaik kiLiththaN sERkat
kunRa vEttic chiyaikkaN kAttik
koNdu vEttup punappaing kAttiR – puNarvOnE

kongu lAththith thazhaikkung kAppoR
koNda lArththuc chiRakkung kAtchik
kongu nAttuth thiruchcheng kOttup – perumALE.

English Easy Version

thunju kOttic chuzhal kaN kAttik
kongai nOkkap palarkkum kAttik
koNdu aNAppith thulakkam seerththuth – thirimAnAr

thoNdai vAyp pon karuppanj chAtRaith
thanthu sErththuk kalakkum thUrththath
thunpa vAzhkkaith thozhil paNdu Attaththu – uzhalAthE

kanjam vAyththitta avarkkum kUttik
kanRu mEyththitta avarkkum kUtRaik
kanRa mAyththitta avarkkum thOtRak – kidaiyA nee

kaNdu vEttup poruL koNdAttaththu
inpa vAkyaththu enakkum kEdkath
thanthu kAththuth thiruk kaN sAththap – peRuvEnO

vanjamAyp pukku oLikkum cUl kaith
thunRu cUrp pottu ezhac chenRu Ottip
paNdu vAtkuL kaLikkum thOL koththu – udaiyOnE

vaNdu pAttu utRu isaikkum thOttath
thaN kurAp ponpu urak kumpu EtRith
thoNdar kUttaththu irukkum thOtRaththu – iLaiyOnE

konju vArththaik kiLith thaN sEl kaN
kunRa vEtticchiyaik kaN kAttik
koNdu vEttup punam paim kAttil – puNarvOnE

kongu ulAththith thazhaikkum kAp pon
koNdal Arththuc chiRakkum kAtchik
kongu nAttuth thiruchchengOttup – perumALE