Thiruppugal 595 Meychcharvuatre
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் – பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத் – தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் – கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற் – பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப் – பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் – கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் – புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே
நிச்சார் துற்பப் – பவ வேலை
விட்டேறிப் போக ஒட்டாமல் தே(ன்) மட்டே
அத் தத்தையர் – மேலே
பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார்
பத்தார் விற்பொற் – கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்முன்
பாலைக் கற்பகமே – தான்
செச் சாலிச் சாலத் தேறிச் சேல்
உற்று ஆணித்துப் – பொழிலேறும்
செக்கோடைக் கோடுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் – கதிர் ஏனல்
முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்
முத்து ஆர் வெட்சிப் – புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே
English
meycchAr vatRE poycchAr vutRE
nicchAr thuRpap – pavavElai
vittE RippO kottA matRE
mattE yaththath – thaiyarmElE
picchA yucchA kippO reyththAr
paththAr viRpoR – kazhalpENip
piRpAl pattE naRpAl petRAr
muRpA laikkaR – pakamEthAn
secchA licchA laththE RicchE
lutRA Niththup – pozhilERum
sekkO daikkO dukkE niRpAy
niththA sekkark – kathirEnal
mucchA licchA liththAL veRpAL
muththAr vetchip – puyavELE
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.
English Easy Version
meyc chArvu atRE poyc chArvu utRE
nicchAr thuRpap – pava vElai
vittERip pOka ottAmal thE(n)
mattE ath thaththaiyar – mElE
picchAy ucchAkip pOr eyththAr
paththAr viRpoR – kazhalpENip
piRpAl pattE naRpAl petRArmun
pAlaik kaRpakamE – thAn
sec chAlic chAlath thERic
chEl utRu ANiththup – pozhilERum
sekkOdaik kOdukkE niRpAy
niththA sekkark – kathir Enal
mucchAlic chAlith thAL veRpAL
muththu Ar vetchip – puyavELE
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.