திருப்புகழ் 70 நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்)

Thirupugal 70 nAlumaindhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்த தான தான – தான தந்த தான தான
தான தந்த தான தான – தனதான

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக – மதனூடே

நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக – வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி – விளைதீமை

நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு – தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல – மெனுமாதி

காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத – மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் – மருகோனே

ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான – பெருமாளே.

பதம் பிரித்தது.

தான தந்த தான தான – தான தந்த தான தான
தான தந்த தான தான – தனதான

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால்கை யாகி
நாரி யென்பில் ஆகும் ஆகம் – அதனூடே

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்க ளான ஆடி
நாடறிந்திடாமல் ஏக – வளராமுன்

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து பாருளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி – விளைதீமை

நோய்கலந்த வாழ்வுறாமல் நீகலந்து உள் ஆகு ஞான
நூல் அ டங்க ஓத வாழ்வு – தருவாயே

காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து ஓலம் ஓலம் – எனும் ஆதி

காமன் ஐந்து பாணமோடு வேமின் என்றுகாணு மோனர்
காள கண்ட ரோடு வேத – மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் – மருகோனே

ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும்
ஆதியான செந்தில் வாழ்வதான – பெருமாளே.

English

nAlu maindhu vAsal keeRu thURu dambu kAlkai yAgi
nAri yenbil Agum Agam – adhanUdE

nAdha mondRa Adhi vAyil nAta kangaL Ana Adi
nAda Rindhi dAma lEga – vaLarAmun

nUla nantha kOdi thEdi mAlmi gundhu pAru LOrai
nURu senchol kURi mARi – viLaitheemai

nOyka landha vAzhvu RAmal neeka landhu LAgu nyAna
nUla danga Odha vAzhvu – tharuvAyE

kAlan vandhu bAlan Avi kAya vendRu pAsam veesu
kAlam vandhu Olam Olam – enumAdhi

kAman aindhu bANa mOdu vEmi nendru kANu mOnar
kALa kaNda rOdu vEdha – mozhivOnE

Ala mondRu vElai yAgi yAnai anjal theeru mUla
Azhi angai Ayan mAyan – marugOnE

Ara NangaL thALai nAda vAra Nangkai mEvum Adhi
yAna sendhil vAzhva dhAna – perumALE.

English Easy Version

nAlu maindhu vAsal keeRu thUR udambu kAl kaiyAgi
nAri yenbil Agum Agam – adhanUdE

nAdhamondra Adhi vAyil nAtakangaLAna Adi
nAdaRindhi dAmalEga – vaLarAmun

nUl anantha kOdi thEdi mAl migundhu pAruLOrai
nURu senchol kURi mARi – viLai theemai

nOykalandha vAzhvuRAmal nee kalandhuLAgu nyAna
nUl adanga Odha vAzhvu – tharuvAyE

kAlan vandhu bAlan Avi kAya vendru pAsam veesu
kAlam vandhu Olam Olam – enum Adhi

kAman aindhu bANamOdu vEminendru kANu mOnar
kALa kaNdarOdu vEdha – mozhivOnE

Alamondru vElaiyAgi yAnai anjal theeru mUla
Azhi angai Ayan mAyan – marugOnE

AraNangaL thALai nAda vAraNang kai mEvum AdhiyAna
sendhil vAzhvadhAna – perumALE.