திருப்புகழ் 789 ஆடல் மாமத ராஜன் (பாகை)

Thiruppugal 789 Adalmamadharajan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் – தனதான

ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
தாகம் வேர்வுற மால்கொண் – டயராதே

ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென் – றுலையாதே

சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென் – றலையாதே

தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின் – றடைவேனோ

பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளும் – தவறாதே

பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங் – குமரேசா

கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் – தமிழ்வீரா

கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
கோல மாமயி லேறும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் – தனதான

ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து
ஆகம் வேர்வுற மால் கொண்டு – அயராதே

ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று
ஆயு(ள்) வேதனையே என்று – உலையாதே

சேடன் மா முடி மேவும் பார் உ(ள்)ளோர்களுள் நீடும்
த்யாகம் ஈபவர் யார் என்று – அலையாதே

தேடி நான் மறை நாடும் காடும் ஓடிய தாளும்
தேவ நாயக நான் இன்று – அடைவேனோ

பாடு நான் மறையோனும் தாதை ஆகிய மாலும்
பாவை பாகனும் நாளும் – தவறாதே

பாக நாள் மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென்
பாகை மா நகர் ஆளும் – குமரேசா

கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம்
கூறு(ம்) நாவல மேவும் – தமிழ் வீரா

கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும்
கோல மா மயில் ஏறும் – பெருமாளே.

English

Adal mAmatha rAjan pUsal vALiyi lEnon
thAkam vErvuRa mAlkoN – dayarAthE

Ara vANakai yArsenj chEli nEvali lEsen
RAyu vEthanai yEyen – RulaiyAthE

sEdan mAmudi mEvum pAru LOrkaLuL needun
thyAka meepavar yAren – RalaiyAthE

thEdi nAnmaRai nAdung kAdu mOdiya thALun
thEva nAyaka nAnin – RadaivEnO

pAdu nAnmaRai yOnun thAthai yAkiya mAlum
pAvai pAkanu nALum – thavaRAthE

pAka nANmalar chUdum sEka rAmathil chUzhthen
pAkai mAnaka rALung – kumarEsA

kUda lAnmuthu kUnan ROda vAthuyar vEthang
kURu nAvala mEvun – thamizhveerA

kOdi thAnavar thOLun thALum veezhavu lAvung
kOla mAmayi lERum – perumALE.

English Easy Version

Adal mA matha rAjan pUsal vALiyilE nonthu
Akam vErvuRa mAl koNdu – ayarAthE

Aram vAL nakaiyAr sem sElin EvalilE senRu
Ayu(L) vEthanaiyE enRu – ulaiyAthE

sEdan mA mudi mEvum pAr u(L)LOrkaLuL needum
thyAkam eepavar yAr enRu – alaiyAthE

thEdi nAn maRai nAdum kAdum Odiya thALum
thEva nAyaka nAn inRu – adaivEnO

pAdu nAn maRaiyOnum thAthai Akiya mAlum
pAvai pAkanum nALum – AnuthavaRAthE

pAka nAL malar chUdum sEkarA mathil chuzh then
pAkai mA nakar ALum – kumarEsA

kUdalAn muthu kUn anRu Oda vAthu uyar vEtham
kURu(m) nAvala mEvum – thamiz veerA

kOdi thAnavar thOLum thALum veezha ulAvum
kOla mA mayil ERum – perumALE.