Thiruppugal 867 Malaidhanilvandhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த – தனதான
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
வாசமலர் சிந்து – குழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
மால்பெருகி நின்ற – மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்று
தாழ்குழல்கள் கண்டு – தடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
சாலமிக நொந்து – தவியாமற்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழிந்து
காதலுமை மைந்த – எனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
காண அரு ளென்று – பெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்பு
கோபமுட னின்ற – குமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
கோணநகர் வந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த – தனதான
மாலை தனில் வந்து வீதி தனில் நின்று
வாச மலர் சிந்து – குழல் கோதி
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க
மால் பெருகி நின்ற – மடவாரை
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று
தாழ் குழல்கள் கண்டு – தடுமாறித்
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி
சால மிக நொந்து – தவியாமல்
காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து
காதல் உமை மைந்த – என ஓதி
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று – பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு
கோபமுடன் நின்ற – குமரேசா
கோதை இரு பங்கின் மேவ வளர்
கும்பகோண நகர் வந்த – பெருமாளே
English
mAlaithanil vanthu veethithanil ninRu
vAsamalar sinthu – kuzhalkOthi
vArirutha nangaL pUNoduku lunga
mAlperuki ninRa – madavArai
sAlaivazhi vanthu pOmavarka NinRu
thAzhkuzhalkaL kaNdu – thadumARith
thAkamayal koNdu mAliruLa zhunthi
sAlamika nonthu – thaviyAmaR
kAlaiyile zhunthu nAmamemo zhinthu
kAthalumai maintha – enavOthik
kAlamumu Narnthu njAnaveLi kaNkaL
kANaaru LenRu – peRuvEnO
kOlamuda nanRu cUrpadaiyin munpu
kOpamuda ninRa – kumarEsA
kOthaiyiru pangin mEvavaLar kumpa
kONanakar vantha – perumALE.
English Easy Version
mAlai thanil vanthu veethi thanil ninRu
vAsa malar sinthu – kuzhal kOthi
vAr iru thanangaL pUNodu kulunga
mAl peruki ninRa – madavArai
sAlai vazhi vanthu pOm avarkaL ninRu
thAzh kuzhalkaL kaNdu – thadumARith
thAka mayal koNdu mAl iruL azhunthi
sAla mika nonthu – thaviyAmal
kAlaiyil ezhunthu un nAmame mozhinthu
kAthal umai maintha – ena Othi
kAlamum uNarnthu njAna veLi kaNkaL
kANa aruL enRu – peRuvEnO
kOlamudan anRu cUr padaiyin munpu
kOpamudan ninRa – kumarEsA
kOthai iru pangin mEva vaLar
kumpakONa nakar vantha – perumALE