திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்)

Thiruppugal 904 Ennalpirakkavum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன – தந்ததான

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் – கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் – பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் – தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் – இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் – தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் – கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் – தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு – தம்பிரானே.

பதம் பிரித்தது

தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன – தந்ததான

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும் – கண்களாலே

என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும் – பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் – தொந்தநோயை

என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்கு – நான் ஆர்

கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல்
கர்ணாமிர்தப்பதம் – தந்தகோவே

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
கண்ணாடியில் தடம் – கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளியிற் கொளும் – தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு – தம்பிரானே

English

ennAl piRakkavum ennAl iRakkavum
ennAl thudhikkavum – kaNgaLAlE

ennAl azhaikkavum ennAl nadakkavum
ennAl irukkavum – peNdir veedu

ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum – thondha nOyai

ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum – ingu nAnAr

kannAr uriththa en mannA enakku nal
karNA mirthap padham – thandha kOvE

kallAr manath udan illA manath thava
kaNNAdi yitradam – kaNda vElA

mannAna thakkanai munnAL mudith thalai
vanvALi yiRkoLum – thanga rUpan

mannA kuRaththiyin mannA vayaRpadhi
mannA muvarkkoru – thambirAnE.

English Easy Version

ennAl piRakkavum ennAl iRakkavum
ennAl thudhikkavum – kaNgaLAlE

ennAl azhaikkavum ennAl nadakkavum
ennAl irukkavum – peNdir veedu

ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum – thondha nOyai

ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum – ingu nAnAr

kannAr uriththa en mannA enakku nal
karNA mirthap padham – thandha kOvE

kallAr manath udan illA manath thava
kaNNAdi yitradam – kaNda vElA

mannAna thakkanai munnAL mudith thalai
vanvALi yiRkoLum – thanga rUpan

Manna kuRaththiyin mannA vayaRpadhi
mannA muvarkkoru – thambirAnE