Thiruppugal 926 Niththappinikodu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன – தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக – லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு – மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி – லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற – இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட – வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை – யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய – ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன – தனதான
நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது
அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்)
நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத – கலவை மேவி
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர்
இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்)
நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் – மட ஆண்மை
எத்தித் திரியும் இது ஏது பொ(ய்)யாது என
உற்றுத் தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சைப் பட அறியாது பொய் மாயையில் – உழல்வேனை
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும்
உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான
அமுது இட்டுத் திருவடியாம் உயர் வாழ்வு உற – இனிது ஆள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட – என பேரி
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர்
திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சத முடி நாணிட வேல் அதை – எறிவோனே
வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல
சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்புப் புரம் அது நீறு எழ காணியர் – அருள் பாலா
வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி
சித்தத்து அமர் குமரா எமை ஆள் கொள
வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய – பெருமாளே
English
niththap piNikodu mEviya kAyami
thappup piruthivi vAyuvu thEyuvu
niRpoR kakanamo dAmivai pUthaka – lavaimEvi
niRkap padumula kALavu mAkari
daththaik koLavume nAdidu mOdidu
nettup paNikalai pUNidu nAnenu – madavANmai
eththith thiriyumi thEthupo yAthena
vutRuth theLivuNa rAthumey njAnamo
dicchaip padaaRi yAthupoy mAyaiyi – luzhalvEnai
eththiR kodunina thAradi yArodu
muyththit tunatharu LAluyar njAnamu
thittuth thiruvadi yAmuyar vAzhvuRa – inithALvAy
thaththath thanathana thAnana thAnana
thiththith thimithimi theethaka thOthaka
daththak kudakuku thAkuda theekuda – venapEric
chaththath tholithikai thAvida vAnavar
thikkuk kedavaru cUrarkaL thULpada
sarppac chathamudi nANida vElathai – yeRivOnE
vetRip podiyaNi mEniyar GOkula
saththik kidamaruL thAthaki vENiyar
veRpup puramathu neeRezha kANiya – raruLbAlA
veRputh thadamulai yALvaLi nAyaki
siththath thamarkuma rAemai yALkoLa
vetRip pukazhkaru vUrthanil mEviya – perumALE.
English Easy Version
niththa(m) piNi kodu mEviya kAyam ithu
appup piruthivi vAyuvu(m) thEyuvu(m)
nil pon kakanam odu Am ivai pUtha – kalavai mEvi
niRkappadum ulaku ALavum mAkar
idaththaik koLavumE nAdidum Odidu(m)
nettup paNi kalai pUN idu nAn enum – mada ANmai
eththith thiriyum ithu Ethu po(y)yAthu ena
utRuth theLivu uNarAthu mey njAnamodu
icchaip pada aRiyAthu poy mAyaiyil – uzhalvEnai
eththil kodu ninathu Ar adiyArodum
uyththittu unathu aruLAl uyar njAna amuthu
ittuth thiruvadiyAm uyar vAzhvu uRa – inithu ALvAy
thaththath thanathana thAnana thAnana
thiththith thimithimi theethaka thOthaka
daththak kudakuku thAkuda theekuda – ena pEri
saththaththu oli thikai thAvida vAnavar
thikkuk keda varu(m) cUrarkaL thULpada
sarppac chatha mudi nANida vEl athai – eRivOnE
vetRip podi aNi mEniyar gOkula
saththikku idam aruL thAthaki vENiyar
veRpup puram athu neeRu ezha kANiyar – aruL pAlA
veRputh thada mulaiyAL va(L)Li nAyaki
siththaththu amar kumarA emai AL koLa
vetRip pukazh karuvUr thanil mEviya – perumALE