திருப்புகழ் 952 ஈர மோடு சிரித்து (கீரனூர்)

Thiruppugal 952 Eeramodusiriththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன – தனதான

ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
நாத கீதந டிப்பிலு ருக்கவும்
ஏவ ராயினு மெத்திய ழைக்கவு – மதராஜன்

ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்
வீதி மீதுத லைக்கடை நிற்கவும்
ஏறு மாறும னத்தினி னைக்கவும் – விலைகூறி

ஆர பாரத னத்தைய சைக்கவு
மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்
ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் – அதிமோக

ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு
மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவ – ருறவாமோ

பார மேருப ருப்பத மத்தென
நேரி தாகஎ டுத்துட னட்டுமை
பாக ராரப டப்பணி சுற்றிடு – கயிறாகப்

பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
பாரி சாதமு தற்பல சித்திகள் – வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
பாளு வாகிய பச்சுரு வச்சுதன் – மருகோனே

கேடி லாவள கைப்பதி யிற்பல
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
கீர னுருறை சத்தித ரித்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன – தனதான

ஈரமோடு சிரித்து வருத்தவும்
நாத கீத நடிப்பில் உருக்கவும்
ஏவராயினும் எத்தி அழைக்கவும் – மத ராஜன்

ஏவின் மோது கண் இட்டு மருட்டவும்
வீதி மீது தலைக் கடை நிற்கவும்
ஏறு மாறு மனத்தினில் நினைக்கவும் – விலை கூறி

ஆர பார தனத்தை அசைக்கவும்
மாலை ஓதி குலைத்து முடிக்கவும்
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் – அதி மோக

ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும்
மேல் விழா வெகு துக்கம் விளைக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவர் – உறவாமோ

பார மேரு பருப்பத(ம்) மத்து என
நேரிதாக எடுத்து உடன் நட்டு உமை
பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு – கயிறாக

பாதி வாலி பிடித்திட மற்றொரு
பாதி தேவர் பிடித்திட லக்ஷுமி
பாரிசாத முதல் பல சித்திகள் – வருமாறு

கீர வாரிதியை கடைவித்து
அதிகாரியாய் அமுதத்தை அளித்த
க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் – மருகோனே

கேடிலா அளகை பதியில் பல
மாட கூட மலர் பொழில் சுற்றிய
கீரனூர் உறை சத்தி தரித்து அருள் – பெருமாளே.

English

eera mOdusi riththuva ruththavum
nAtha keethana dippilu rukkavum
Eva rAyinu meththiya zhaikkavu – matharAjan

Evin mOthuka Nittuma ruttavum
veethi meethutha laikkadai niRkavum
ERu mARuma naththini naikkavum – vilaikURi

Ara pAratha naththaiya saikkavu
mAlai yOthiku laiththumu dikkavum
Adai sOraa vizhththarai sutRavum – athimOka

Asai pOlmana ishtamu raikkavu
mElvi zhAveku thukkamvi Laikkavum
Ana thOthaka viththaikaL kaRpava – ruRavAmO

pAra mErupa ruppatha maththena
nEri thAkae duththuda nattumai
pAka rArapa dappaNi sutRidu – kayiRAkap

pAthi vAlipi diththida matRoru
pAthi thEvarpi diththida lakshumi
pAri sAthamu thaRpala siththikaL – varumARu

keera vArithi yaikkadai viththathi
kAri yAyamu thaththaiya Liththakru
pALu vAkiya pacchuru vacchuthan – marukOnE

kEdi lAvaLa kaippathi yiRpala
mAda kUdama larppozhil sutRiya
keera nuruRai saththitha riththaruL – perumALE.

English Easy Version

eeramOdu siriththu varuththavum
nAtha keetha nadippil urukkavum
EvarAyinum eththi azhaikkavum – matha rAjan

Evin mOthu kaN ittu maruttavum
veethi meethu thalaik kadai niRkavum
ERu mARu manaththinil ninaikkavum – vilai kURi

Ara pAra thanaththai asaikkavum
mAlai Othi kulaiththu mudikkavum
Adai sOra avizhaththu arai sutRavum – athi mOka

Asai pOl mana ishtam uraikkavum
mEl vizhA veku thukkam viLaikkavum
Ana thOthaka viththaikaL kaRpavar – uRavAmO

pAra mEru paruppatha(m) maththu
ena nErithAka eduththu udan nattu
umai pAkar Arap padam paNi sutRidu – kayiRAka

pAthi vAli pidiththida matRoru
pAthi thEvar pidiththida lakshumi
pArisAtha muthal pala siththikaL – varumARu

keera vArithiyai kadaiviththu
athikAriyAy amuthaththai aLiththa krupALu
Akiya pacchu uru acchuthan – marukOnE

kEdilA aLakai pathiyil pala
mAda kUda malar pozhil sutRiya
keeranUr uRai saththi thariththu aruL – perumALE.