திருப்புகழ் 973 சுரும்பு அணி (இலஞ்சி)

Thiruppugal 973 Surumbuani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த – தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற – விழிவேலால்

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
சுருண்டும யங்கி – மடவார்தோள்

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
மெலிந்துத ளர்ந்து – மடியாதே

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள்ச தங்கை – யடிதாராய்

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை – யெறிவோனே

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
புரந்தரன் வஞ்சி – மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பைம ணந்த – மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சிய மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த – தனதானா

சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு
துரந்து எறிகின்ற – விழி வேலால்

சுழன்று சுழன்று துவண்டு துவண்டு
சுருண்டு மயங்கி – மடவார் தோள்

விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து – மடியாதே

விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை
விதம் கொள் சதங்கை – அடி தாராய்

பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற
பொன் அம் கிரி ஒன்றை – எறிவோனே

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள்
புரந்தரன் வஞ்சி – மணவாளா

இரும் புன மங்கை பெரும் புளகம் செய்
குரும்பை மணந்த – மணி மார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று
இலஞ்சி அமர்ந்த – பெருமாளே

English

surumpaNi koNdal nedungkuzhal kaNdu
thurantheRi kinRa – vizhivElAl

suzhanRusu zhanRu thuvaNduthu vaNdu
suruNduma yangi – madavArthOL

virumpiva rampu kadanthuna danthu
melinthutha Larnthu – madiyAthE

viLanguka dampu vizhainthaNi thaNdai
vithangkoLsa thangai – yadithArAy

porunthala mainthu sithampeRa ninRa
polangiri yonRai – yeRivOnE

pukazhnthuma kizhnthu vaNanguku NangkoL
purantharan vanji – maNavALA

irumpuna mangai perumpuLa kanjey
kurumpaima Nantha – maNimArpA

ilanjiyil vantha ilanjiya menRu
ilanjiya marntha – perumALE.

English Easy Version

surumpu aNi koNdal nedum kuzhal kaNdu
thuranthu eRikinRa – vizhi vElAl

suzhanRu suzhanRu thuvaNdu thuvaNdu
suruNdu mayangki – madavAr thOL

virumpi varampu kadanthu nadanthu
melinthu thaLarnthu – madiyAthE

viLangu kadampu vizhainthu aNi thaNdai
vitham koL sathangai – adi thArAy

porunthal amainthu usitham peRa ninRa
pon am kiri onRai – eRivOnE

pukazhnthu makizhnthu vaNangu kuNam koL
purantharan vanji – maNavALA

irum puna mangai perum puLakam sey
kurumpai maNantha – maNi mArpA

ilanjiyil vantha ilanjiyam enRu
ilanji amarntha – perumALE