மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு
பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே (1)
பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை
போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே (2)
பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு
போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே (3)
போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ்
பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே (4)
பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல
பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே (5)
பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி
பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே (6)
பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி
பாறுபேய் துய்த்திடநி ணங்க்ளுட் டிடுமே (7)
பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக
பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே (8)
ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக
ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே (9)
யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ
ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே (10)
ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல்
ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே (11)
ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும
றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே (12)
மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு
மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான் (13)
வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை
வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான் (14)
வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை
வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன் (15)
மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு
வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே (16)
பதம் பிரித்தது
பூவுளோனுக்கும் உயர் தேவர்கோனுக்கும் எழு
பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர்த்திடுமே (1)
பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை
போல மாயக் கரிய கங்குல் நீக்கிடுமே (2)
பூதி பூசிப் பரமர் தோலை மேல் இட்டதொரு
போர்வை போல் நெட்டுறை மருங்கு சேர்த்திடுமே (3)
போரிலே நிர்த்தம் இடு வீர மகாலக்ஷ்மி மகிழ்
பூசை நேசித்து மலர் தும்பை சாத்திடுமே (4)
பாவ ரூபக் கொடிய சூரனார் பெற்ற பல
பாலர் மாளத் தசைகள் உண்டு தேக்கிடுமே (5)
பானுகோபப் பகைஞன் மேனி சோரக் குருதி
பாயவே வெட்டி இரு துண்டமாக்கிடுமே (6)
பாடு சேர் யுத்த கள மீதிலே சுற்று நரி
பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே (7)
பாடி ஆடிப் பொருத போரிலே பத்திரக-
பாலி சூலப் படையை வென்று தாக்கிடுமே (8)
ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க் கலிக-
ளாம் அகோரக் களை களைந்து நீக்கிடுமே (9)
யாருமே அற்றவன் என் மீது ஓர் ஆபத்து உற
வராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே (10)
ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கு முதல்
ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே (11)
ஆலகாலத்தை நிகர் கால சூலத்தையும் அ-
றாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே (12)
மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
மேருவாம் வில் பரமர் தந்த பாக்கியவான் (13)
வேடர் மானுக்கும் (வள்ளி) உயர் தேவயானைக்கும் இசை
வேலர் தாளைத் தொழுது உயர்ந்த வாழ்க்கையினான் (14)
வீறு சேர் மிக்க கணநாதனார் எட்டு வகை
வீரர் நேயத் தமையன் என்ற தோட் துணைவோன் (15)
மேன்மையாம் லக்ஷரத வீரர் பூசிக்க வரு
வீரவாகுத் தலைவன் வென்ற வாட் படையே (16)