மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
அருண கணபண புயக சுடிகையின்
அகில புவனமும் உதவு மலைமகள் (1)
அமலை யாரியை யந்தரி சுந்தரி
யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி (2)
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி (3)
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி (4)
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி (5)
ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் (6)
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி (7)
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும்
அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் (8)
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை
வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் (9)
ஆசிலா சார தபோதன ரின்புறும்
வாசகா தீத மனோலய பஞ்சரன் (10)
அகரு ம்ருகமத களப பரிமள
விகட முகபட கடின புளகித (11)
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி
குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி (12)
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி
தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் (13)
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில்
ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் (14)
அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் (15)
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும்
ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் (16)
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் (17)
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில்
அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் (18)
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி
அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் (19)
ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
ஆரவே பாலமு தாருநெ டுந்தகை (20)
வருண சரவண மடுவில் வருமொரு
மதலை மறைகமழ் குதலை மொழியினன் (21)
மதுக ராரவ மந்திர சிந்துர
மணம றாத கடம்பு புனைந்தவன் (22)
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக
மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை (23)
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் (24)
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட
நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் (25)
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக
மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய (26)
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது
பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் (27)
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன்
உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் (28)
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள
வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் (29)
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் (30)
வரத விதரண விரத அநுபவ
மவுன குருபரன் நிபுண குணதரன் (31)
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற
வலிய பாரவி லங்கிடு புங்கவன் (32)
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும்
உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் (33)
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய
செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் (34)
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள்
சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் (35)
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல
வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் (36)
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய
வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் (37)
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன்
வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் (38)
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர்
வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு (39)
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர்
சூரமா சேனையை மோதுக ளந்தனில் (40)
உருவம் இருளெழ எயிறு நிலவெழ
உலகு வெருவர அசைய வருவன (41)
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட
நடைவி நோதவி தம்புரி பந்திய (42)
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக
உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன (43)
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும்
ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன (44)
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை
ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன (45)
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய
மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ (46)
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில்
உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன (47)
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில்
உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன (48)
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல்
உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன (49)
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்
ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ (50)
உடலி னிசிசரர் மவுலி ஒலியலும்
உதடு மலைவன பதடி முலையின (51)
உததி யேழும டங்கவு றிஞ்சியும்
உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ (52)
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும்
ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன (53)
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு
வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன (54)
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை
விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன (55)
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ
ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன (56)
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென
மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன (57)
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன
உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன (58)
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு
ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன (59)
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி
ஓதுசா மீகர நேமி பிடுங்குவ (60)
கரணம் இடுவன குணலை யிடுவன
கழையை நடுவன பவுரி வருவன (61)
ககன கூடமு டைந்துவி ழும்படி
கதறி வாயனல் கண்கனல் சிந்துவ (62)
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித
சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக (63)
கண்டச் சம்பதிப் பேத மாம்பல
கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி (64)
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண
சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன (65)
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ
காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ (66)
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய
கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன (67)
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய
நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின (68)
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின
கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ (69)
காலமா றாத வராளிசி கண்டிகை
பாலசீ காமர மானவி பஞ்சிகை (70)
கவுட பயிரவி லளிதை கயிசிகை
கவுளி மலகரி பவுளி யிசைவன (71)
கனவ ராடிய ரும்பட மஞ்சரி
தனத னாசிவி தம்படு பஞ்சமி (72)
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில்
உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன (73)
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு
றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ (74)
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை
மத்தளி கொட்டிய முற்றும டிப்பன (75)
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை
வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி (76)
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன
முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன (77)
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு
களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன (78)
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய (79)
காதநூ றாயிர கோடி வளைந்தன
பூதவே தாளம் அநேகவி தங்களே. (80)
பதம் பிரித்தது
அருண கண பண புயக சுடிகையின்
அகில புவனமும் உதவும் மலைமகள் – (1)
அமலை ஆரியை அந்தரி சுந்தரி
இமய மா மயில் அம்பை த்ரியம்பகி (2)
அச்சுத சகோதரி அனைத்து வேதத் தலைவி
அற்புத புராதனி வர ப்ரகாச ப்ரக்ருதி (3)
அம் பொன் குண்டலப் பேதை சாம்பவி
விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி (4)
அக்ஷர லக்ஷ ஜபத்தர் க்ரமத்திடு
சக்ர தலத்தி த்ரியக்ஷி சடக்ஷரி (5)
ஆயி இரு திரு மைந்தன் முகம் ஆயிரம் விளங்கியது ஓர்
ஆறு தர வந்து அருளும் ஆறுமுக புண்டரிகன் (6)
அரு வரை திறந்து வன் சங்க்ராம கற்கிமுகி
அபயம் இட அஞ்சல் என்று அங்கீரனுக்கு உதவி (7)
அரசு அறிய வாமன முனிக்கு ஒரு தமிழ் த்ரயமும்
அபரிமிதமாக விவரித்த கடவுள் புலவன் (8)
அநுபவ சித்த பவக் கடலில் புகாது எனை
வினவி எடுத்து அருள் வைத்த கழல் க்ருபாகரன் (9)
ஆசு இலா சார தபோதனர் இன்புறும்
வாசக அதீத மனோலய பஞ்சரன் (10)
அகரு ம்ருகமத களப பரிமள
விகட முக பட கடின புளகித (11)
அமிர்த பூதரி அண்டர் செழுங் கொடி
குமுத வாய் மயில் குஞ்சரி மஞ்சரி (12)
அக்கம் ஒரு கோடி பெறு வஜ்ர பாணி குமரி
தக்க அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவன் (13)
ஐம்பத்து ஒன்றில் எட்டு ஆறில் மூன்றினில்
ஐந்தில் தங்கும் அப்பாலை வான் பொருள் (14)
அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப் புயன் (15)
ஆறு நிலை என்று முதல் ஆகிய பரங்கிரியும்
ஆவினன்குடியும் ஆரணம் முடிந்த இடமும் (16)
அருணையும் இலஞ்சியும் செந்தூர் திருப்பழநி
அடியர் மன பங்கயம் செங்கோடு இடைக்கழியும் (17)
அநவரத நீல மலர் முத்து எறி சுனைப் புனலில்
அருவி குதி பாய்தரு திருத்தணி என் வெற்பும் எனும் (18)
அலகில் திருப்பதியில் பயில் கற்பக அடவி
அநுபவன் அத்தன் நிருத்தன் அரத்த ஆடையன் (19)
ஆறு மா மாதர் பயோதர பந்தியில்
ஆரவே பால் அமுது ஆரும் நெடுந்தகை (20)
வருண சரவண மடுவில் வரும் ஒரு
மதலை மறை கமழ் குதலை மொழியினன் (21)
மதுகர ஆரவ மந்திர சிந்துர
மணம் அறாத கடம்பு புனைந்தவன் (22)
மட்டு ஒழுகு சார மதுரித்த தேனைப் பருக
மர்க்கட சமூகம் அமை தொட்டு இறால் எட்டு வரை (23)
மன்றல் பைம் புனத்தாள் பதாம்புயம்
வந்திக்கும் தனிக் காம வாஞ்சையன் (24)
மத்தம் முடித்தருள் அத்தர் ப்ரியப்பட
நித்த மறைப் பொருளைத் தெளிவித்தவன் (25)
மாதிரமும் மந்தரமும் நீரும் நிலனும் கனக
மால் வரையுடன் சுழல வாசுகி விடம் பொழிய (26)
மகர சலிலம் கடைந்து இந்த்ராதியர்க்கு அமுது
பகிர்தரு முகுந்தன் மருகன் பஞ்சாயுதக் கடவுள் (27)
மருகன் மறவாதவர் நினைப்பவை முடிக்கும் அவன்
உருகும் அடியார் இரு வினைத் தொகை அறுக்கும் அவன் (28)
மறவர் பொருப்பில் ஒருத்தி பொருட்டு அந்நாள் இள
வடிவம் முழுக்க நரைத்த விருத்த வேதியன் (29)
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
ஆதி கூதாள மதாணி அலங்க்ருதன் (30)
வரத விதரண விரத அநுபவ
மவுன குருபரன் நிபுண குணதரன் (31)
வனஜ ஜாதனை அன்று முனிந்து அற
வலிய பார விலங்கு இடு புங்கவன் (32)
மட்டில் இரு நாலு திசை கட்டு நேமிக் கிரியும்
உத்தர குணாதி குட தக்ஷிணா திக் கிரியும் (33)
மங்கத் துங்க விட்டு ஏறு வாங்கிய
செங் கைப் பங்கயச் சோதி காங்கேயன் (34)
மத்த மல த்ரய மித்தை தவிர்த்து அருள்
சுத்த பவித்ர நிவர்த்தி அளிப்பவன் (35)
வாரண முகன் தனது தாதையை வலம் சுழல
வாகை மயில் கொண்டு உலகு சூழ் நொடி வரும் குமரன் (36)
மயம் உறு ப்ரபஞ்சமும் சங்கேத ஷட் சமய
வழியும் மனமும் கடந்து எங்கேனும் நிற்கும் அவன் (37)
மதுர மொழியால் உலகு அனைத்தையும் உணர்த்தும் அவன்
வட அனல நேர் கொடிய குக்குடம் உயர்த்த குகன் (38)
மரகத பக்ஷ குலத்து உரக திவாகரர்
வடிவை உருக்கி வடித்த திருக் கை வேல் கொடு (39)
வாரி கோ கோ என வாய் விட வந்து எதிர்
சூர மா சேனையை மோது களந்தனில் (40)
உருவம் இருள் எழ எயிறு நிலவு எழ
உலகு வெருவர அசைய வருவன (41)
உடைய நாயகி கண்டும் மகிழ்ந்திட
நடை விநோத விதம் புரி பந்திய (42)
ஒக்கலை விடாது அழுது அரற்று பாலர்க்கு மிக
உச்சி வெடியாது நிணம் மெத்தவே தப்புவன (43)
உங்குக்கு இங்கு விட்டு ஆழி நான்கினும்
ஒன்றுக்கு ஒன்று அடி பாய்தல் காண்பன (44)
யுத்த களத்தினில் ரத்ந மணிக் குவை
ஒட்டமொடு ஒற்றை இரட்டை பிடிப்பன (45)
யோகினிகளும் பெரிய சாகினிகளும் புதிய
மோகினிகளும் பழைய டாகினிகளும் புகழ (46)
உவண நிரை கொண்டிடும் செங் காவணத்து இடையில்
உறவு கொள வந்து தம் பெண் காறை கட்டுவன (47)
உமிழ் குருதி ஆறு அடைபடக் குறடு அடுக்கியதில்
உபவனம் ஓர் ஏழையும் முறித்து அரு கொழுக்குவன (48)
உடு படலத்தை மறைத்த குறைக்கு வால் உடல்
உதிர சமுத்திரம் முற்று நிலைப்படா தன (49)
ஓடை மால் வாரண யூகம் அடங்கலும்
ஓர் ஓர் பேய் நீள் கடை வாயில் அடங்குவ (50)
உடலின் நிசிசரர் மவுலி ஒலியலும்
உதடு மலைவன பதடி முலையின (51)
உததி ஏழும் அடங்க உறிஞ்சியும்
உதர வார் அழல் நின்று கொளுந்துவ (52)
உக்கிர இராவணன் எடுத்த மேருக் கிரியும்
ஒற்றி இரு தோள் கொடு பறித்திடாது அப்புவன (53)
ஒன்றித் திண் குரல் கூகை பாம்பொடு
வென்றிச் செந் தலைத் தாலி பூண்பன (54)
ஒக்க மிடற்றில் இறக்கு குறைத் தலை
விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன (55)
யோகு புரியும் குகையும் யோகபரரும் பொருவ
ஓடை மத தந்தி வயிறு ஊடு இனிது உறங்குவன (56)
உசித பிசிதம் கொணர்ந்து இங்கு ஏற விற்றுமென
மத மலை எலும்பு கொண்டு அங்காடி கட்டுவன (57)
உதிர நிண வாள் பெருக ஒட்டுவன வெட்டுவன
உடலின் நடு ஊடுருவ முட்டுவன தட்டுவன (58)
ஒழுகு பிணத்து நிணத்தின் அளற்றிலே பழு
ஒடிய உழக்கி வழுக்கி உருட்டி வீழ்வன (59)
ஊசல் ஆர் வார் குழை ஓலை இடும்படி
ஓது சாமீகர நேமி பிடுங்குவ (60)
கரணம் இடுவன குணலை இடுவன
கழையை நடுவன பவுரி வருவன (61)
ககன கூடமும் உடைந்து விழும்படி
கதறி வாய் அனல் கண் கனல் சிந்துவ (62)
கைச் சதியினால் முறை விதித்த வாமுற்கடித
சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக (63)
கண்டச் சம்பதிப் பேதம் ஆம் பல
கஞ்சப் பஞ்சகத் தாளம் ஆம்படி (64)
கற்சரி உற்சவ தர்ப்பண லக்ஷண
சச்சரி மட்டிசை ஒற்றி அறுப்பன (65)
காய் எரிய பங்கியொடு சேகரம் மிகுந்து அசைவ
காது படு சங்க வள மாலிகை புனைந்து இசைவ (66)
கருணை அதிகந்து வந்து ஒண் கோகுலப் பெரிய
கரு முடியொடும் படும் கங்காளம் ஒத்துவன (67)
கடி பயிரவாதிகள் ப்ரியப்படு கதிக்கு இசைய
நடை நவிலு பாவனை உதிக்கு நட வித்தையின (68)
கடகம் அடுத்த இடக் கை வலக் கை வாளின
கருதிய லக்ஷிய லக்ஷணம் முற்றும் ஓதுவ (69)
காலம் மாறாத வராளி சிகண்டிகை
பால சீகாமரம் ஆன விபஞ்சிகை (70)
கவுட பயிரவி லலிதை கயிசிகை
கவுளி மலகரி பவுளி இசைவன (71)
கன வராடி அரும்பட மஞ்சரி
தனதனாசி விதம் படு பஞ்சமி (72)
கைச் சுலவு கோல் முறை விதித்த ராகத்து அடைவில்
உச்சமது சாதிகம் எடுத்து மேல் எட்டுவன (73)
கஞ்சக் கஞ்சம் நல் தேசி ராஞ்சி கு-
-றிஞ்சிப் பண் குறித்து யாழை ஏந்துவ (74)
கற்ற உடுக்கை இடக்கை களப் பறை
மத்தளி கொட்டி முற்றும் அடிப்பன (75)
கார் என முழங்கு குரல் ஏறு துடி சந்த்ரவளை
வீர முரசு உந்திமில் தடாரி குட பஞ்சமுகி (76)
கரடி பறை அங்கனந்தம் கோடி கொட்டுவன
முறை முறை கவந்தம் நின்று ஒன்றோடு கிட்டுவன (77)
கச ரத பதாகினி அரக்கர் துணிபட்டு விழு
களம் முழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன (78)
கடிய குணத்த சினத்த சகஸ்ர யோசனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய (79)
காதம் நூறாயிர கோடி வளைந்தன
பூத வேதாளம் அநேக விதங்களே. (80)