திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது
கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும்
சீலத்தனள் தென்திருமல்லிநாடி செழுங்குழல்மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய
சோலைக்கிளி அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.
அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி
மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயர்பயந்த விளக்கு. 1
[…] நாச்சியார் திருமொழி தனியன்கள் […]