பெருமாள் திருமொழி தனியன்கள்

உடயவர்அருளிச்செய்தது

இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் எங்கள்
குலசேகரனென்றேகூறு

மணக்கால்நம்பிஅருளியது

ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன்
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. 1

1 thought on “பெருமாள் திருமொழி தனியன்கள்”

Leave a Reply