திருப்புகழ் 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)

Thirupugal 10 Karukkumanjana (thirupparangkundRam)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ….. நகையாலே

களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ……மிடறூடே

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ……அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ……வரைபோலும்

நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர …… அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் …… இளையோனே

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு
நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு – நகையாலே

களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ
மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர்
கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு – கொடு போகி

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற
அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் – மிடறூடே

நடித்து எழும் குரல் குமு குமு குமு என
இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற – அருள்வாயே

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என
உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என
நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என – வரை போலும்

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு
சிரக் கொடும் குவை மலை புரை தர இரு
நிணக் குழம்பொடு குருதிகள் சொரி தர – அடுதீரா

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு
புழைக்கை தண் கட கய முக மிக உள
சிவக் கொழுந்து அ(ன்)ன கணபதியுடன் வரும் – இளையோனே

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய
பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு
திருப்பரங்கிரி தனில் உறை சரவண – பெருமாளே.

English

kaRukkum anjana vizhiyiNai ayilkodu
nerukki nenjaRa eRitharu pozhuthoru
kanikkuL insuvai amuthukum orusiRu – nakaiyAlE

kaLakko zhungkali valaikodu visiRiye
manaikke zhunthirum enamanam urukaor
kavaRchi koNdida manaithanil azhakodu – kodupOki

naRaiththa panjaNai misaiyinil manamuRa
aNaiththa kanthanil iNaimulai ethirpora
nakaththa zhunthida amuthithazh parukiyu – midaRUdE

nadiththe zhungkural kumukumu kumuvena
isaiththu nankodu manamathu maRukida
nazhuppu nanjana siRumikaL thuyaraRa – aruLvAyE

niRaiththa theNdirai mokumoku mokuvena
uraththa kanjuki mudineRu neRuvena
niRaiththa aNdamu kadukidu kiduvena – varaipOlum

nivaththa thiNkazhal nisisara ruramodu
sirakko dungkuvai malaipurai tharairu
niNakku zhampodu kuruthikaL sorithara – adutheerA

thiRaRka rungkuzhal umaiyavaL aruLuRu
puzhaikkai thaNkada kayamuka mikavuLa
sivakko zhunthana kaNapathi yudanvarum – iLaiyOnE

sinaththo dunjaman uthaipada niRuviya
paraRku LanpuRu puthalvanan maNiyuku
thiruppa rangkiri thaniluRai saravaNa – perumALE.

English Easy Version

kaRukkum anjana vizhi iNai ayil kodu
nerukki nenju aRa eRi tharu pozhuthu oru
kanikkuL in suvai amuthu ukum oru siRu – nakaiyAlE

kaLam kozhum kali valai kodu visiRiye
manaikku ezhunthirum ena manam uruka Or
kavaRchi koNdida manai thanil azhakodu – kodu pOki

naRaiththa panju aNai misaiyinil manam uRa
aNaiththa akam thanil iNai mulai ethir pora
nakaththu azhunthida amuthu ithazh parukiyum – midaRUdE

nadiththu ezhum kural kumu kumu kumu ena
isaiththu nankodu manam athu maRukida
nazhuppu nanjana siRumikaL thuyar – aRa aruLvAyE

niRaiththa theN thirai moku moku moku ena
uraththa kanjuki mudi neRu neRu neRu ena
niRaiththa aNda mukadu kidu kidu ena – varai pOlum

nivaththa thiN kazhal nisisarar uramodu
sirak kodum kuvai malai purai thara iru
niNak kuzhampodu kuruthikaL sori thara – adutheerA

thiRal karum kuzhal umaiyavaL aruL uRu
puzhaikkai thaN kada kaya muka mika uLa
sivak kozhunthu a(n)na kaNapathiyudan varum – iLaiyOnE

sinaththodum saman uthai pada niRuviya
paraRku uLam anpuRu puthalva nan maNi uku
thirupparangkiri thanil uRai saravaNa – perumALE.

தமிழ் பாடல் வரிகளுடன்
English Lyrical