திருப்புகழ் 1246 தலைவலய போகம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1246 Thalaivalayabhogam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தானனம் தனதனன தானனம்
தனதனன தானனம் – தனதான

தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங் – கனல்போலுந்

தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்
சமயவெகு ரூபமும் – பிறிதேதும்

அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
டறியுமொரு காரணந் – தனைநாடா

ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
றபரிமித மாய்விளம் – புவதோதான்

கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்
களபமொழி யாதகொங் – கையுமாகிக்

கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங்
கருதியிது வேளையென் – றுகிராத

குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
குலிசகர வாசவன் – திருநாடு

குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன்
குலையநெடு வேல்விடும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தானனம் தனதனன தானனம்
தனதனன தானனம் – தனதான

தலைவலய போகமும் சலனமிகு மோகமும்
தவறுதரு காமமும் – கனல்போலுந்

தணிவரிய கோபமும் துணிவரிய லோபமும்
சமயவெகு ரூபமும் – பிறிதேதும்

அலம் அலம் எனா எழுந்தவர்கள் அநுபூதிகொண்டறியு
மொரு காரணந்தனை – நாடா

ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்று
அபரிமிதமாய் – விளம்புவதோதான்

கலகஇரு பாணமும் திலகவொரு சாபமும்
களபம் ஒழியாத – கொங்கையுமாகி

கவரும் அவதாரமும் கொடியபரிதாபமும்
கருதியிது வேளையென்று – கிராத

குலதிலக மானுடன் கலவிபுரிவாய் பொருங்
குலிச கர வாசவன் – திருநாடு

குடிபுக நிசாசரன் பொடிபட மகீதரன்
குலைய நெடு வேல்விடும் – பெருமாளே

English

thalai valaya bOgamunj chalanamigu mOhamun
thavaRu tharu kAmamung – kanal pOlun

thaNi ariya kOpamun thuNi ariya lObamun
samaya vegu rUpamum – piRidhEdhum

alamalamenA ezhundhavargaL anubUthi koNd
aRiyum oru kAraNan – thanai nAdA

thadhi madha purANamun surudhigaLum Agi nindr
aparimithamAy viLam – buvadhOthAn

kalaga irubANamun thilaka oru sApamung
kaLabam ozhiyAdha kon – gaiyumAgik

kavarum avathAramung kodiya parithApamung
karudhi idhu vELaiyendr – ukirAdha

kulathilaka mAnudan kalavi purivAy porung
kulisakara vAsavan – thirunAdu

kudipuga nisAcharan podipada maheedharan
kulaiya nedu vElvidum – perumALE.

English Easy Version

thalai valaya bOgamunj chalanamigu mOhamun
thavaRu tharu kAmamung – kanal pOlun

thaNi ariya kOpamun thuNi ariya lObamunj
samaya vegu rUpamum – piRidhEdhum

alamalamenA ezhundhavargaL anubUthi koNdaRiyum
oru kAraNan thanai – nAdA

thadhi madha purANamun surudhigaLum Agi nindru
aparimithamAy viLam – buvadhOthAn

kalaga irubANamun thilaka oru sApamung
kaLabam ozhiyAdha – kon gaiyumAgi

kavarum avathAramung kodiya parithApamung
karudhi idhu vELaiyendru – kirAdha

kulathilaka mAnudan kalavi purivAy porung
kulisakara vAsavan – thirunAdu

kudipuga nisAcharan podipada maheedharan
kulaiyanedu vElvidum – perumALE.