Thirupugal 201 Avamaruvu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் – தனதானா
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் – றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
றிவாகியுள மால்கொண் – டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் – றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் – தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் – கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் – கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் – புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் – தனதானா
அவாமருவு இ(ன்)னா வசுதை காணுமடவாரெனும்
அவார்கனலில் வாழ்வென்று – ணராதே
அராநுகர வாதையுறு தேரைகதி நாடும்
அறிவாகி உளம் மால்கொண்டு – அதனாலே
சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத
திமிர ஆகரனை வாவென்று – அருள்வாயே
திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
தியானமுறு பாதந் – தருவாயே
உவா இனிய கானுவில் நிலாவும் மயில்வாகனம்
உலாசமுடன் ஏறுங் – கழலோனே
உலா உதயபாநு சதகோடி உருவான ஒளிவாகும்
அயில் வேல் – அங்கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வரா சிவசுதா
எயினர் மான் – அன்புடையோனே
சுராதிபதி மால் அயனு மாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் – பெருமாளே.
English
avA maruvinA vasudhai kANu madavArenum
avArkanalil vAzhven – druNarAdhE
arA nugara vAdhaiyuRu thErai gathi nAdum
aRivAgiyuLa mAl koN – dadhanAlE
sivAyavenu nAmam orukAlu ninaiyAdha
thimirAkaranai vAven – draruLvAyE
thirOdha malamARum adiyArgaL arumAthavar
dhiyAnamuRu pAdhan – tharuvAyE
uvAviniya kAnuvi nilAvu mayil vAganam
ulAsamudan ERung – kazhalOnE
ulA udhaya bAnu sathakOdi uruvAna
oLivAgu mayil vElang – kaiyilOnE
dhuvAdhasa buyAchala shadAnana varA siva
suthA eyinar mAnan – budaiyOnE
surAdhipathi mAl ayanu mAlodu salAmidu
suvAmimalai vAzhum – perumALE.
English Easy Version
avA maruvinA vasudhai kANu madavArenum
avArkanalil vAzhven – druNarAdhE
arA nugara vAdhaiyuRu thErai gathi nAdum
aRivAgiyuLa mAl koN – dadhanAlE
sivAyavenu nAmam orukAlu ninaiyAdha
thimirAkaranai vAvendru – aruLvAyE
thirOdha malamARum adiyArgaL arumAthavar
dhiyAnamuRu pAdhan – tharuvAyE
uvAviniya kAnuvi nilAvu mayil vAganam
ulAsamudan ERung – kazhalOnE
ulA udhaya bAnu sathakOdi uruvAna
oLivAgum ayil vElang – kaiyilOnE
dhuvAdhasa buyAchala shadAnana varA siva
suthA eyinar mAnan – budaiyOnE
surAdhipathi mAl ayanu mAlodu salAmidu
suvAmimalai vAzhum – perumALE.