Thirupugal 206 Endhaththigaiyinum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன – தனதான
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி – னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின் – முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் – குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி லெனதுள முருகவும் – வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுகச – லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு – மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையரு – ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன – தனதான
எந்தத் திகையினு மலையினும் உவரியின்
எந்தப் படியினும் முகடினும் உளபல
எந்தச் சடலமும் உயிரியை பிறவியின் – உழலாதே
இந்தச் சடமுடன் உயிர்நிலை பெற
நளினம்பொற் கழலிணைகளில் மருமலர்கொடு
என்சித் தமுமனமு உருகிநல் சுருதியின் – முறையோடே
சந்தித்து அரஹர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்க புளகித மெழஇரு விழிபுனல் – குதிபாய
சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன்
அந்தத் திருநடமிடு சரண் அழகுற
சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் – வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுக – சலரி பேரி
துன்ற சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர்மலர் அயன்மறை புகழ்தர
துன்புற்று அவுணர்கள் நமனுலகு உற விடும் – அயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடிவு அடலணி
எந்தைக்கு உயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையருள் – இளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணர் அரி மருக
நல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய – பெருமாளே.
English
endhath thigaiyinum malaiyinum uvariyin
endhap padiyinu mukadinum uLa pala
endha chadalamum uyiriyai piRaviyin – uzhalAdhE
indhach chadamudan uyir nilai pera naLi
nam poR kazhal iNaigaLil maru malar kodu
en chiththamu manamurugi nalsurudhiyin – muRaiyOdE
sandhith arahara sivasiva saraNena
kumbit iNaiyadi avaiyena thalai misai
thangap puLakitham ezha iruvizhi punal – kudhi pAya
champaik kodiyidai vibudhaiyin azhagu
mun andhath thirunadamidu charaN azhaguRa
sandha sabai thanil enadhuLam urugavum – varuvAyE
thondhath thiguguda thaguguda dimidimi
thandhath thanathana dudududu damadama
thungath dhisai malai uvariyu maRuga – salari bEri
thundra silaimaNi galagala galinena
sindha surar malarayan maRai pugazh thara
thunbut ravuNargaL namanula guRavidu – mayil vElA
gandha sadaimudi kanal vadi vadalaNi
endhaik kuyirenu malai magaL marakatha
gandhap parimaLa dhanagiri umai aruL – iLaiyOnE
kanjap padhamivar thirumagaL kulamagaL
ampoR kodiyidai puNarari maruga nal
kandhap pozhil thigazh gurumalai maruviya – perumaLE.
English Easy Version
endhath thigaiyinum malaiyinum
uvariyin endhap padiyinu mukadinum
uLa pala endha chadalamum uyiriyai piRaviyin – uzhalAdhE
indhach chadamudan uyir nilai
pera naLinam poR kazhal iNaigaLil maru malar kodu
en chiththamu manamurugi nalsurudhiyin – muRaiyOdE
sandhith arahara sivasiva saraNena
kumbit iNaiyadi avaiyena thalai misai
thanga puLakitham ezha iruvizhi punal – kudhi pAya
champaik kodiyidai vibudhaiyin azhagumun
andhath thirunadamidu charaN azhaguRa
sandha sabai thanil enadhuLam urugavum – varuvAyE
thondhath thiguguda thaguguda dimidimi
thandhath thanathana dudududu damadama
thungath dhisai malai uvariyu maRuga – salari bEri
thundra silaimaNi galagala galinena
sindha surar malarayan maRai pugazh thara
thunbut ravuNargaL namanula guRavidu – mayil vElA
gandha sadaimudi kanal vadi vadalaNi
endhaik kuyirenu malai magaL marakatha
gandhap parimaLa dhanagiri umai aruL – iLaiyOnE
kanjap padhamivar thirumagaL kulamagaL
ampoR kodiyidai puNarari maruga nal
kandhap pozhil thigazh gurumalai maruviya – perumaLE.