திருப்புகழ் 209 கடிமா மலர்க்குள் (சுவாமிமலை)

Thirupugal 209 Kadimamalarkkul

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த – தனதான

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த – தொடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட – கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து – பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க – ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த – பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து – வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க – ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த – தனதான

கடிமா மலர்க்குள் இன்பமுள வேரி கக்கு நண்புதரு
மா கடப்பு அமைந்த – தொடைமாலை

கனமேரு ஒத்திடும் பன்இருமா புயத்த ணிந்த
கருணாகர ப்ரசண்ட – கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது நித்தமும் தண்
முடியானது உற்று உகந்து – பணிவோனே

வளவாய்மை சொற்ப்ரபந்தமுள கீரனுக்கு உகந்து
மலர்வாய் இலக்கணங்கள் – இயல்பு ஓதி

அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன்
அருளால் அளிக்க உகந்த – பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொல் அதுமீது நித்தமும்
தணருளே தழைத்து உகந்து – வரவேணும்

செடிநேர் உடற் குடம்பை தனின்மேவியுற்றிடு இந்த
படிதான் அலக்கண் இங்கண் – உறலாமோ

திறமாதவர்க்க னிந்துன் இருபாத பத்மம் உய்ந்த
திருவேரகத்தமர்ந்த – பெருமாளே.

English

kadi mA malarkkuL inbam uLa vEri kakku naNbu
tharu mA kadappa maindha – thodai mAlai

gana mEru oththidum panniru mA buyath aNindha
karuNAkara prachaNda – kadhirvElA

vadivAr kuRaththi than ponnadi meedhu niththam unthaN
mudiyAna dhutR ugandhu – paNivOnE

vaLavAymai soR prabandham uLa keeranuk ugandhu
malarvAy ilakkaNangaL – iyalbOdhi

adimOnai soRkiNanga ulagAm uvappa endrun
aruLAl aLikku kandha periyOnE

adiyEn uraiththa punchol adhumeedhu niththam unthaN
aruLE thazhaith ugandhu – varavENum

chedi nEr udaR kudambai thanin mEvi utRi dindha
padidhAn alakkaN ingaN – uRalAmO

thiRa mAdhavark kanindhun iru pAdha padhma muyndha
thiru vEragath amarndha – perumALE.

English Easy Version

kadi mA malarkkuL inbam uLa vEri kakku naNbu
Tharu mA kadappa maindha – thodai mAlai

gana mEru oththidum panniru mA buyath aNindha
karuNAkara prachaNda – kadhirvElA

vadivAr kuRaththi than ponnadi meedhu niththam
unthaN mudiyAna dhutR ugandhu – paNivOnE

vaLavAymai soR prabandham uLa keeranukkku
malarvAy ilakkaNangaL – iyalbOdhi

adimOnai soRkiNanga ulagAm uvappa Endru una
ruLAl aLikku ukandha – periyOnE

adiyEn uraiththa punchol adhumeedhu niththam
unthaN aruLE thazhaith ugandhu – varavENum

chedi nEr udaR kudambai thanin mEvi utRidu indha
padidhAn alakkaN ingaN – uRalAmO

thiRa mAdhavark kanindhun iru pAdha padhmam uyndha
thiru vEragath amarndha – perumALE.