திருப்புகழ் 223 நாவேறு பா மணத்த (சுவாமிமலை)

Thiruppugazh 223 Naverupamanaththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த – தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று – வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த – நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு – னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ – லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த – குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி – மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் – முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த – தனதான

நாவேறு பாம ணத்த பாதாரமே நினைத்து
நாலாறு நாலு பற்று – வகையான

நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த – நெறியாக

நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க
நேராக வாழ்வதற்குன் – அருள்கூர

நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே பராபரத்தை
நீகாணென ஆவனைச்சொல் – அருள்வாயே

சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராகவே உரைத்த – குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீரா குகா குறத்தி – மணவாளா

காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த
கா ஆர் சுவாமி வெற்பின் – முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற – பெருமாளே.

English

nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu
nAl ARu nAlu patru – vagaiyAna

nAlArum Agamaththin nUlAya nyAna muththi
nALdhOru nAn uraiththa – neRiyAga

neevER enAdh irukka nAn vER enAdhirukka
nErAga vazhvadhaRkun – aruLkUra

needAr shadAdharaththin meedhE parAparaththai
nee kAN enA anaichchol – aruLvAyE

sEvERum eesar sutra mA nyAna bOdha budhdhi
seerAgavE uraiththa – gurunathA

thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu
dheerA guhA kuRaththi – maNavALA

kAvEri nEr vadakkilE vAvi pU maNaththa
kavAr suvAmi veRpin – murugOnE

kAr pOlu mEni petra mAkALi vAlai saththi
kAmAri vAmi petra – perumALE.

English Easy Version

nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu
nAl ARu nAlu patru – vagaiyAna

nAlArum Agamaththin nUlAya nyAna muththi
nALdhOru nAn uraiththa – neRiyAga

neevER enAdh irukka nAn vER enAdhirukka
nErAga vazhvadhaRkun – aruLkUra

needAr shadAdharaththin meedhE parAparaththai
nee kAN enA anaichchol – aruLvAyE

sEvERum eesar sutra mA nyAna bOdha budhdhi
seerAgavE uraiththa – gurunathA

thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu
dheerA guhA kuRaththi – maNavALA

kAvEri nEr vadakkilE vAvi pU maNaththa
kavAr suvAmi veRpin – murugOnE

kAr pOlu mEni petra mAkALi vAlai saththi
kAmAri vAmi petra – perumALE.