திருப்புகழ் 224 நிலவினிலே (சுவாமிமலை)

Thiruppugazh 224 Nilavinile

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தான தந்த தனதன தான தந்த
தனதன தான தந்த – தனதான

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத ணிந்து – குழைதாவும்

நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து – மதனூலின்

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி – யநுராகக்

கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற – னருள்கூராய்

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய மும்பொன் – வரைதானும்

உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த – குமரேசா

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோர வெங்கண் – மயில்வாழ்வே

கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தான தந்த தனதன தான தந்த
தனதன தான தந்த – தனதான

நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து
நிறை குழல் மீது அணிந்து – குழை தாவும்

நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள்
நினைவு அறவே மொழிந்து – மத(ன்) நூலின்

கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து
கனி இதழே அருந்தி – அநுராகக்

கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு(ம்)
கபடனை ஆள உன்றன் – அருள் கூராய்

உலகம் ஓர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும்
உயர் கயிலாயமும் பொன் – வரை தானும்

உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற
உமை அருளால் வளர்ந்த – குமரேசா

குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த
குமர கடோர வெம் கண் – மயில் வாழ்வே

கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த
குரு மலை மீது அமர்ந்த – பெருமாளே.

English

nilavini lEyi runthu vakaimala rEthe rinthu
niRaikuzhal meetha Ninthu – kuzhaithAvum

nikaraRu vEli nangaL varithara vAsa kangaL
ninaivaRa vEmo zhinthu – mathanUlin

kalapama nOka ranga LaLavaRa vEpu rinthu
kaniyitha zhEya runthi – yanurAkak

kalaviyi lEmu yangi vanithaiyar pAlma yangu
kapadanai yALa vunRa – naruLkUrAy

ulakamo rEzhu maNda rulakamu meesar thangu
muyarkayi lAya mumpon – varaithAnum

uyirodu pUtha mainthu morumutha lAki ninRa
umaiyaru LAlva Larntha – kumarEsA

kulaipadu cUra nanga mazhipada vEle Rintha
kumaraka dOra vengaN – mayilvAzhvE

kodumudi yAyva Larnthu puyanilai pOlu yarntha
kurumalai meetha marntha – perumALE.

English Easy Version

nilavinilE irunthu vakai malarE therinthu
niRai kuzhal meethu aNinthu – kuzhai thAvum

nikar aRu vEl inangaL varithara vAsakangaL
ninaivu aRavE mozhinthu – matha(n) nUlin

kalapa manOkarangaL aLavu aRavE purinthu
kani ithazhE arunthi – anurAkak

kalaviyilE muyangi vanithaiyar pAl mayangu(m)
kapadanai ALa unRan – aruL kUrAy

ulakam Or Ezhum aNdar ulakamum eesar thangum
uyar kayilAyamum pon – varai thAnum

uyirodu pUtham ainthum oru muthalAki ninRa
umai aruLAl vaLarntha – kumarEsA

kulai padu cUran angam azhipada vEl eRintha
kumara kadOra vem kaN – mayil vAzhvE

kodu mudiyAy vaLarnthu puyal nilai pOl uyarntha
kuru malai meethu amarntha – perumALE.