திருப்புகழ் 229 மகர கேதனத்தன் (சுவாமிமலை)

Thiruppugal 229 Magarakedhanaththan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த – தனதான

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு – நெறிசேர்வார்

மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் – மடமாதர்

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து – விடுமாறு

இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப – தொருநாளே

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து – மயில்வீரா

அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு – மிளையோனே

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி – லுறைவோனே

விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த – தனதான

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து
மதுர நாணி இட்டு – நெறி சேர்வார்

மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
வலிய சாயகக் கண் – மட மாதர்

இகழ வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
இளமை போய் ஒளித்து – விடுமாறு

இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
உன் இனிய தாள் அளிப்பது – ஒரு நாளே

அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட
அதிரவே நடத்தும் – மயில் வீரா

அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு
அடைய வாழ்வு அளிக்கும் – இளையோனே

மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் – உறைவோனே

விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க
வினவ ஓதுவித்த – பெருமாளே.

English

makara kEtha naththa nuruvi lAne duththu
mathura nANi yittu – neRisErvAr

malaiya vEva Laiththa silaiyi nUdo Liththa
valiya sAya kakkaN – madamAthar

ikazha vAsa mutRa thalaiye lAmve Luththu
iLamai pOyo Liththu – vidumARu

idaivi dAthe duththa piRavi vEra Ruththun
iniya thALa Lippa – thorunALE

akila mEzhu mettu varaiyin meethu mutta
athira vEna daththu – mayilveerA

asurar sEnai kettu muRiya vAna varkku
adaiya vAzhva Likku – miLaiyOnE

mikani lAve Riththa amutha vENi niRka
vizhaisu vAmi veRpi – luRaivOnE

viraiya njAna viththai yaruLsey thAthai kaRka
vinava vOthu viththa – perumALE.

English Easy Version

makara kEthanaththan uruvu ilAn eduththu
mathura nANi ittu – neRi sErvAr

malaiyavE vaLaiththa silaiyin Udu oLiththa
valiya sAyakak kaN – mada mAthar

Ikazha vAsam utRa thalai e(l)lAm veLuththu
iLamai pOy oLiththu – vidumARu

idai vidAthu eduththa piRavi vEr aRuththu
un iniya thAL aLippathu – oru nALE

akilam Ezhum ettu varaiyin meethu mutta
athiravE nadaththum – mayil veerA

asurar sEnai kettu muRiya vAnavarkku
adaiya vAzhvu aLikkum – iLaiyOnE

mika nilA eRiththa amutha vENi niRka
vizhai suvAmi veRpil – uRaivOnE

viraiya njAna viththai aruL sey thAthai kaRka
vinava Othuviththa – perumALE.