திருப்புகழ் 233 வாரம் உற்ற (சுவாமிமலை)

Thiruppugal 233 Varamutra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த – தனதான

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
னீடு மெய்த்து யர்ந்து – வயதாகி

வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
மார்க ளுக்கி சைந்து – பொருள்தேடி

ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
மாப ணிக்கள் விந்தை – யதுவான

ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
டாவி மெத்த நொந்து – திரிவேனோ

சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
சூழ்சு ரர்க்க ணன்பு – செயும்வீரா

சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
சூத னுக்கி சைந்த – மருகோனே

ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
தானி றைக்க வந்த – தொருசாலி

யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
மேர கத்த மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த – தனதான

வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின்
நீடு மெய்த் துயர்ந்து – வயது ஆகி

வாலையில் திரிந்து கோல மைக் கண் மங்கை
மார்களுக்கு இசைந்து – பொருள் தேடி

ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த
மா பணிக்கள் விந்தை – அதுவான

ஆடக(ம்) ஒப்ப அமைந்த ஓலை முத்தமும்
கொடு ஆவி மெத்த நொந்து – திரிவேனோ

சூரனைத் துரந்து வேர் அறப் பிளந்து
சூழ் சுரர்க் கண் அன்பு – செ(ய்)யும் வீரா

சூகரத்தொடு அம் பு தான் எடுத்து வந்த
சூதனுக்கு இசைந்த – மருகோனே

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று
தான் இறைக்க வந்தது – ஒரு சாலியே

மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும்
ஏரகத்து அமர்ந்த – பெருமாளே.

English

vAra mutRa paNpin mAtha mutRa naNpi
needu meyththu yarnthu – vayathAki

vAlai yitRi rinthu kOla maikkaN mangai
mArka Lukki sainthu – poruLthEdi

Ara mikka ponka LAla maiththa marntha
mApa NikkaL vinthai – yathuvAna

Ada koppa maintha vOlai muththa munko
dAvi meththa nonthu – thirivEnO

cUra naiththu ranthu vEra Rappi Lanthu
sUzhsu rarkka Nanpu – seyumveerA

cUka raththo dampu thAne duththu vantha
cUtha nukki saintha – marukOnE

Ere thirththu vanthu neerkaL katti yanRu
thAni Raikka vantha – thorusAli

yEmi kuththu yarntha mAva yaRkaL minju
mEra kaththa marntha – perumALE.

English Easy Version

vAram utRa paNpin mAtham utRa naNpin
needu meyth thuyarnthu – vayathu Aki

vAlaiyil thirinthu kOla maik kaN mangaim
ArkaLukku isainthu – poruL thEdi

Aram mikka ponkaLAl amainthu amarntha
mA paNikkaL vinthai – athuvAna

Adaka(m) oppa amaintha Olai muththamum
kodAvi meththa nonthu – thirivEnO

cUranaith thuranthu vEr aRap piLanthu
sUzh surark kaN anpu – se(y)yum veerA

cUkaraththodu am pu thAn eduththu vantha
cUthanukku isaintha – marukOnE

Er ethirththu vanthu neerkaL katti anRu
thAn iRaikka vanthathu – oru sAliyE

mikuththu uyarntha mA vayaRkaL minjum
Erakaththu amarntha – perumALE.