Thiruppugal 257 Kavadutrasiththar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் – தனதான
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் – பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் – துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் – பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
சரணப்ர சித்திசற் – றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் – ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் – தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் – பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க்கவிப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் – தனதான
கவடுற்ற சித்தர் சட் சமயப்ர மத்தர் நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் – பலவாகக்
கருதி பெயர்க்குறித்து உருவர்க்கம் இட்டு இடர்க்
கருவிற்புகப் பகுத்து – உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும்
மிக்க சரப்பளிக்கு எனப் – பொருள்தேடி
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின்
சரணப்ரசித்தி – சற்றுணராரோ
குவடு எட்டும் அட்டு நெட்டு உவரிக்கணத்தினைக்
குமுறக் கலக்கி – விக்ரமசூரன்
குடலைப்புயத்திலிட்டு உடலைத்தறித்து உருத்து
உதிரத்தினிற்குளித்து – எழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினில்
துவலைச்சிமிழ்த்து – நிற்பவள்நாணத்
தொழுதெத்து முத்த பொற் புரிசைச்செருத்தணி
சுருதித் தமிழ்க்கவிப் – பெருமாளே.
English
kavadutRa siththarsat samayapra maththarnaR
kadavutpra dhishtaipaR – palavAkak
karuthippe yarkkuRith thuruvarkka mittidark
karuviRpu kappakuth – thuzhalvAnEn
savadikki lacchinaik kirukaiccha rikkumik
kacarappa Likkenap – poruLthEdi
sakalaththu motRaipat tayalpattu niRkunin
charaNapra siththisat – RuNarArO
kuvadettu mattunet tuvarikka Naththinaik
kumuRakka lakkivik – ramacUran
kudalaippu yaththilit tudalaiththa Riththuruth
thuthiraththi niRkuLith – thezhumvElA
suvadutRa aRputhak kavalaippu naththiniR
Ruvalaicci mizhththuniR – pavaLnANath
thozhutheththu muththapoR purisaicche ruththaNic
curuthiththa mizhkkavip – perumALE.
English Easy Version
kavadutRa siththar sat samayapra maththar
naR kadavut pradhishtai – paRpalavAkak
karuthi peyarkkuRith thuruvarkka mittu idark
karuviRpu kappakuth – thuzhalvAnEn
savadikki lacchinaik kirukaiccha rikkum
mikkacarappa Likkenap – poruLthEdi
sakalaththu motRaipattu ayalpattu niRku
niRcharaNapra siththi – satRuNarArO
kuvadettu mattu nettu uvarikka Naththinaik
kumuRakka lakki – vikramacUran
kudalaippu yaththilittu udalaiththa Riththuruth
thuthiraththi niRkuLith – thezhumvElA
suvadutRa aRputhak kavalaippu naththinil
Thuvalaicci mizhththuniR – pavaLnANath
thozhutheththu muththa poR purisaiccheruththaNi
curuthiththa mizhkkavip – perumALE.