திருப்புகழ் 273 திருட்டு நாரிகள் (திருத்தணிகை)

Thiruppugal 273 Thiruttunarigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன – தனதான

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் – வலையாலே

திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
சிமிட்டு காமவி தத்திலு முட்பட – அலைவேனோ

தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு – முருகோனே

சமப்ர வீணம தித்திடு புத்தியில்
இரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண – குருநாதா

வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென – விளையாட

விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய – மறவோனே

பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் – கழுநீரின்

பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
பிறக்க மேவுற அத்தல முற்றுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன – தனதான

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியில் நித்த(ம்) நடிப்பவர்
சிறக்க மேனி உலுக்கி மடக்கு(ம்) கண் – வலையாலே

திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில்
இதத்தை ஓட விடுத்து மயக்கிடு(ம்)
சிமிட்டு காமவிதத்திலும் உட்பட – அலைவேனோ

தரித்து நீறு பிதற்றிடு(ம்) பித்தனும்
இதத்து மா குடிலைப் பொருள் சொற்றிடு
சமர்த்த பால எனப் புகழ் பெற்றிடு – முருகோனே

சமப்ரவீண மதித்திடு புத்தியில்
இரக்கமாய் வரு தற்பர சித் பர
சகத்ர யோக விதக்ஷண தெக்ஷிண – குருநாதா

வெருட்டு சூரனை வெட்டி ரணப் பெலி
களத்திலே கழுதுக்கு இரை இட்டு
இடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென – விளையாட

விதித்த வீர சமர்க்கள ரத்தமும்
இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய – மறவோனே

பெருக்கமோடு சரித்திடு மச்சமும்
உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் – கழு நீரின்

பிணித்த போது வெடித்து ரசத் துளி
கொடுக்கும் ஓடை மிகுத்த திருத்தணி
பிறக்க மேவுற அத்தலம் உற்றுஉறை – பெருமாளே.

English

thiruttu nArikaL pappara mattaikaL
vaRattu mOdiyi niththana dippavar
siRakka mEniyu lukkima dakkukaN – valaiyAlE

thikaiththu LAvika raiththuma naththinil
ithaththai yOdavi duththuma yakkidu
simittu kAmavi thaththilu mutpada – alaivEnO

tharththu neeRupi thatRidu piththanu
mithaththu mAkudi laipporuL sotRidu
samarththa bAlae nappukazh petRidu – murukOnE

samapra veeNama thiththidu puththiyil
irakka mAyvaru thaRpara siRpara
sakathra yOkavi dhakshaNa dhekshiNa – gurunAthA

veruttu cUranai vettira Nappeli
kaLaththi lEkazhu thukkirai yittidar
viduththa kULikaL thiththiku thiththena – viLaiyAda

vithiththa veerasa markkaLa raththamu
miratRi yOdave kupraLa yaththinil
vilakki vElseru kittuyir mokkiya – maRavOnE

perukka mOdusa riththidu macchamu
muLaththin mAmakizh petRida vutRidu
piLappu vAyidai muppozhu thaththumor – kazhuneerin

piNiththa pOthuve diththura saththuLi
kodukku mOdaimi kuththathi ruththaNi
piRakka mEvuRa aththala mutRuRai – perumALE.

English Easy Version

thiruttu nArikaL pappara mattaikaL
vaRattu mOdiyil niththa(m) nadippavar
siRakka mEni ulukki madakku(m) kaN – valaiyAlE

thikaiththu uL Avi karaiththu manaththinil
ithaththai Oda viduththu mayakkidu(m):
simittu kAma vithaththilum utpada – alaivEnO

thariththu neeRu pithatRidu(m) piththanum
ithaththu mA kudilaip poruL sotRidu
samarththa bAla enap pukazh petRidu – murukOnE

samapraveeNa mathiththidu puththiyil
irakkamAy varu thaRpara sith para
sakathra yOka vidhakshaNa dhekshiNa – GurunAthA

veruttu cUranai vetti raNap peli
kaLaththilE kazhuthukku irai ittu idar
viduththa kULikaL thiththiku thiththena – viLaiyAda

vithiththa veera samarkkaLa raththamum
veku praLayaththinil iratRi Oda
vilakki vEl serukiddu uyir mokkiya – maRavOnE

perukkamOdu sariththidu macchamum
uLaththin mA makizh petRida vatRidu
piLappu vAyidai muppozhuthaththum or – kazhu neerin

piNiththa pOthu vediththu rasath thuLi
kodukkum Odai mikuththa thiruththaNi
piRakka mEvuRa aththalam utRu uRai – perumALE.