திருப்புகழ் 322 தலை வலையத்து (காஞ்சீபுரம்)

Thiruppugal 322 Thalaivalaiyaththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான

தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குற – வஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி – ளம்புகாளப்

புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன – னம்பெறாதோ

பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவனெ னத்திக் கியம்பு கின்றது
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை – தந்திடாதோ

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி – கின்றபேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின – வஞ்சிநீலி

கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி – யெங்களாயி

கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான

தலை வலையத்துத் தரம்பெறும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தரும் அயில் செச்சைப் புயம் கயங்குற – வஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர – பந்தம்விளம்பு காளப்

புலவனென தத்துவந்தரந்தெரி
தலைவனென தக்கறஞ்செயுங்குண
புருஷனென பொற் பதந்தருஞ் சனனம் – பெறாதோ

பொறையனெனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய
துறவனென திக்கியம்புகின்றது
புதுமையல சிற் பரம்பொருந்துகை – தந்திடாதோ

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
உலகடை யப்பெற் றவுந்தி அந்தணி
குறைவற முப்பத்திரண்டு அறம்புரி – கின்றபேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின – வஞ்சி நீலி

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற்பகம் திகம்பரி – யெங்களாயி

கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை
சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி
கவுரிதிருக்கொட்டமர்ந்த இந்திரர் – தம்பிரானே.

English

thalaivalai yaththuth tharampe Rumpala
pulavar mathikkac cikaNdi kunReRi
tharumayil checchaip puyanga yangkuRa – vanjiyOdu

thamaniya muththuc chathangai kiNkiNi
thazhuviya chekkac chivantha pangaya
saraNamum vaiththup perumpra panthamvi – LampukALap

pulavane naththath thuvantha rantheri
thalaivane naththak kaRanjche yunguNa
purushane nappoR pathantha runjcana – nampeRAthO

poRaiyane nappoyp prapanja manjiya
thuRavane naththik kiyampu kinRathu
puthumaiya lachchiR parampo runthukai – thanthidAthO

kulasayi laththup piRantha peNkodi
yulakadai yappeR Ravunthi yanthaNi
kuRaivaRa muppath thiraNda Rampuri – kinRapEthai

kuNathari chakrap prasaNda sankari
kaNapaNa rathnap puyanga kangaNi
kuvaduku niththup puranchu dunchina – vanjineeli

kalapavi chithrac chikaNdi sunthari
kadiyavi daththaip pothintha kanthari
karuNaivi zhikkaR pakanthi kampari – yengaLAyi

karuthiya paththark kirangku mampikai
suruthithu thikkap padunthri yampaki
kavurithi rukkot tamarntha inthirar – thambirAnE.

English Easy Version

thalaivalai yaththuth tharampe Rumpala
pulavar mathikkac cikaNdi kunReRi
tharumayil checchaip puyam kayangkuRa – vanjiyOdu

thamaniya muththuc chathangai kiNkiNi
thazhuviya chekkac chivantha pangaya
saraNamum vaiththup perum prapantham – viLampu kALap

pulavanena thaththuvantha rantheri
thalaivanena thakkaRanjche yunguNa
purushanena poR pathantha runj chananam – peRAthO

poRaiyane nappoyp prapanja manjiya
thuRavanena thikkiyampu kinRathu
puthumaiyala chiR parampo runthukai – thanthidAthO

kulasayilaththup piRantha peNkodi
yulakadai yappeR Ravunthi yanthaNi
kuRaivaRa muppath thiraNda Rampuri – kinRapEthai

kuNathari chakrap prasaNda sankari
kaNapaNa rathnap puyanga kangaNi
kuvadukuniththup puranchudun china – vanji neeli

kalapavi chithrac chikaNdi sunthari
kadiyavidaththaip pothintha kanthari
karuNaivizhik kaRpakam thikampari – yengaLAyi

karuthiya paththark kirangku mampikai
suruthi thuthikkap padun thriyampaki
kavurithirukkot tamarntha inthirar – thambirAnE.