Thiruppugal 324 Enakkuchchatru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் – குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக் – கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித் – தணிவோனே
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத் – திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
பணத்துட்கக் கடற்றுட்கப் – பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
பலிப்பப்பத் தருக்கொப்பித் – தருள்வாழ்வே
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத் – திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர்க்கு இச்சைப்
பொருட்பொற் தட்டு இடு இக்கைக்குக் – குடில் மாயம்
எனக்கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற்சுட்டிட்டு அடக்கைக்கு
பிறக்கைக்குத் தலத்திற்புக்கு – இடியாமுன்
தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை பொற்
பெறச்செச்சைப் புயத்து ஒப்பித்து – அணிவோனே
செருக்கிச்சற்று உறுக்கிச்சொற் பிரட்ட துட்டரைத்தப்பித்
திரள் தப்பி கழற்செப்பத் – திறல்தாராய்
பனைக்கைக் கொக்கனை தட்டுப் படக்குத்திப் பட சற்பப்
பணத் துட்கக் கடல துட்கப் – பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று
பலிப்பப் பத்தருக்கு ஒப்பித் – தருள்வாழ்வே
கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிட பச்சைக் கனப்பக்ஷிக்கு
இடைப்புக்குக் களிப்புக்குத் – திரிவோனே
கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு எழிற்சத்திக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.
English
enakkuchatr unakkuchatr enakkaththath thavarkkichchaip
porutpotrat tidikkaikkuk – kudilmAyam
enakkattaik kidaippattit tanaRsuttit tadaikkaikkup
piRakkaikkuth thalaththiRpuk – kidiyAmun
thinaikkutchith thirakkochchaik kuRaththaththai thanaththaipoR
peRachchechchai buyaththoppith – aNivOnE
serukkichchatr uRukki soR pirattaththut taraiththappith
thirattappik kazhaRseppath – thiRalthArAy
panakkaikkok kanaiththattup padakkuththip pada saRpap
paNaththutkak kadatrutkap – porumvElA
parappatruch surukkatrup padhaippatruth thigaippatrup
palippappath tharukkoppith – aruLvAzhvE
kanikkuththik kanaiththuchchutr tridappachchaik ganappakshik
kidaippukkuk kaLippukkuth – thirivOnE
kalikkoppiR salippatruk gathikkoththit tezhiRsaththik
kadaRkachchip padhichchokkap – perumALE.
English Easy Version
enakkuchatr unakkuchatr enakkaththath thavarkku ichchaip
porutpotrat tidikkaikkuk – kudil mAyam
enakkattaikk idaippattittu anaRsuttittu adaikkaikku
piRakkaikkuth thalaththiRpuk – kidiyAmun
thinaikkutchith thirakkochchaik kuRaththaththai thanaththai poR
peRachchechchai buyaththoppith – aNivOnE
serukkichchatr uRukki soR pirattaththut taraiththappith
thirattappi kazhaRseppath – thiRalthArAy
panakkaikkok kanaiththattup padakkuththip pada saRpap
paNaththutkak kadatrutkap – porumvElA
parappatruch surukkatrup padhaippatruth thigaippatrup
palippappath tharukkoppith – aruLvAzhvE
kanikkuththik kanaiththuchchutr trida pachchaik ganappakshik
kidaippukkuk kaLippukkuth – thirivOnE
kalikkoppiR salippatruk gathikkoththittu ezhiRsaththik
kadaRkachchip padhichchokkap – perumALE.