திருப்புகழ் 369 கருணை சிறிதும் (திருவருணை)

Thiruppugal 369 Karunaisiridhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள் – பலர்கூடிக்

கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை விழிபுனல் வரமொழி – குழறாவன்

புருகி யுனதருள் பரவுவகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள – றதுபோக


உதறி லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ – தொருநாளே

தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி – ரவிசூலி

சடில தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத – சதகோடி

அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி – புயவேளே

அடவி சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர்
பிசித அசன மறவர் இவர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் – பலர் கூடி

கல கல என நெறி கெட முறை முறை
முறை கதறி வதறிய குதறிய கலை கொடு
கருத அரியதை விழி புனல் வர மொழி – குழறா அன்பு

உருகி உனது அருள் பரவு வகை வரில் விரகு
ஒழியில் உலக இயல் பிணை விடில் உரை செயல்
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு – அது போக

உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில்
எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது – ஒரு நாளே

தருண சத தள பரிமள பரிபுர
சரணி தமனிய தநு தரி திரி புர
தகனி கவுரி பவதி பகவதி பயி – ரவி சூலி

சடில தரி அநுபவை உமை திரி புரை
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரதி சுத – சத கோடி

அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி – புய வேளே

அடவி சரர் குல மரகத வனிதையும்
அமரர் குமரியும் அனவரதமும் அருகு
அழகு பெற நிலை பெற வரம் அருளிய – பெருமாளே.

English

karuNai siridhumil paRithalai nisicharar
pisidha asana maRavar ivar mudhaliya
kalaga viparitha vegupara samayigal – palar kUdi

galagalena neRikeda muRai muRai muRai
kadhaRi vadhaRiya kudhaRiya kalaikodu
karudha ariyadhai vizhipunal varamozhi – kuzhaRA an

burugi unadharuL paravuvagai varil vira
gozhiyil ulagiyal piNai vidil uraiseyal
uNarvu kedil uyir puNar iruvinai aLa – Radhu pOga

udhaRil enadhenum alamaRil aRivinil
eLidhu peRalena maRai paRai aRaivadhor
udhaya maraNamil poruLinai aruLuvadhu – orunALE

tharuNa sathadhaLa parimaLa paripura
charaNi dhamaniya dhanudhari thiripura
dhahani gavuri bavathi bagavathi – bayiravi sUli

jatiladhari anubavai umai thiripurai
sakala buvanamum udhaviya pathivruthai
samaya mudhalvi thanaiya bagirathi sutha – sathakOdi

aruNa raviyinum azhagiya prabai vidu
karuNai varuNitha dhanupara gurupara
aruNai nagaruRai saravaNa kuravaNi – buyavELE

atavi charar kula marakatha vanithaiyum
amarar kumariyum anavarathamum arugu
azhagu peRa nilai peRa varam aruLiya – perumALE.

English Easy Version

karuNai siridhumil paRithalai nisicharar
pisidha asana maRavar ivar mudhaliya
kalaga viparitha vegupara samayigal – palar kUdi

galagalena neRikeda muRai muRai muRai
kadhaRi vadhaRiya kudhaRiya kalaikodu
karudha ariyadhai vizhipunal varamozhi kuzhaRA – anburugi

unadharuL paravugai varil viragozhiyil
ulagiyal piNai vidil uraiseyal
uNarvu kedil uyir puNar iruvinai – aLaRadhu poga

udhaRil enadhenum alamaRil aRivinil
eLidhu peRalena maRai paRai aRaivadhu
orudhaya maraNamil poruLinai aruLuvadhu – orunALE

tharuNa sathadhaLa parimaLa paripura
charaNi dhamaniya dhanudhari thiripura
dhahani gavuri bavathi bagavathi – bayiravi sUli

jatiladhari anubavai umai thiripurai
sakala buvanamum udhaviya pathivruthai
samaya mudhalvi thanaiya bagirathi sutha – sathakOdi

aruNa raviyinum azhagiya prabai vidu
karuNai varuNitha dhanupara gurupara
aruNai nagaruRai saravaNa kuravaNi – buyavELE

atavi charar kula marakatha vanithaiyum
amarar kumariyum anavarathamum arugu
azhagu peRa nilai peRa varam aruLiya – perumALE.