Thiruppugal 370 Thugilumrugamadha
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
துகிலு ம்ருகமத பரிமள அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை
துவள மனிதரு மமரரு முநிவரு – முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர – நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட
மறுகு தொறுமுல வியினிய கலவியை – விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ – தொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு புரவியு
நெடிய குலைமிட றிடறமு துககன
முகடு கிழிபட வளர்வன கமுகின – மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதிள்களு
முழுது முடையதொ ரருணையி லுறைதரு – மிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு
மபரி மிதமத கரிகளு மரிகளு – முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை முநிதரு புனிதையை
அவச முடன்மல ரடிதொழு துருகிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
துகிலு(ம்) ம்ருகமத பரிமள அளகமு(ம்)
நெகிழ இரு தன கிரி அசை தர இடை
துவள மனிதரும் அமரரும் முநிவரும் – உடன் ஓடித்
தொடர வன மணி மகரம் இலகு குழை
அடருவன விட மிளிர்வன ரதி பதி
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர – நடுவாக
வகிரு(ம்) மதி புரை தநு நுதல் பனிவர
வனச பத யுக பரிபுரம் ஒலி பட
மறுகு தொறும் உலவி இனிய கலவியை – விலை கூறும்
வரைவு இல் அரிவையர் தரு சுக சலதியில்
அலையும் எனது உயிர் அநுதின(ம்) நெறி தரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவது – ஒரு நாளே
முகிலு(ம்) மதியமும் ரவி எழு புரவியு(ம்)
நெடிய குலை மிடறு இடற முது ககன
முகடு கிழிபட வளர்வன கமுகு இன(ம்) – மிசை வாளை
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ்
தடமு(ம்) முளரியும் அகழியும் மதில்களும்
முழுதும் உடையது ஒர் அருணையில் உறை தரும் – இளையோனே
அகிலும் மருதமும் முகளித வகுளமும்
அமுத கதலியும் அருணமும் வருடையும்
அபரிமித மத கரிகளும் அரிகளும் – உடனே கொண்ட
அருவி இழி தரும் அரு வரை தனில் ஒரு
சவர வனிதையை முநி தரு புனிதையை
அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய – பெருமாளே.
English
thukilu mrukamatha parimaLa aLakamu
nekizha iruthana kiriyasai tharaidai
thuvaLa manitharu mamararu munivaru – mudanOdith
thodara vanamaNi makarami lakukuzhai
yadaru vanavida miLirvana rathipathi
suruthi mozhivana kayalvizhi puraLthara – naduvAka
vakiru mathipurai thanunuthal panivara
vanasa pathayuka paripura molipada
maRuku thoRumula viyiniya kalaviyai – vilaikURum
varaivi larivaiyar tharusuka salathiyi
lalaiyu menathuyi ranuthina neRitharu
mavuna sivasuka salathiyil muzhukuva – thorunALE
mukilu mathiyamum raviyezhu puraviyu
nediya kulaimida RidaRamu thukakana
mukadu kizhipada vaLarvana kamukina – misaivALai
muduku kayalukaL vayalkaLu murukavizh
thadamu muLariya akazhiyu mathiLkaLu
muzhuthu mudaiyatho raruNaiyi luRaitharu – miLaiyOnE
akilu maruthamu mukuLitha vakuLamu
mamutha kathaliyum aruNamum varudaiyu
mapari mithamatha karikaLu marikaLu – mudanEkoN
daruvi yizhitharu maruvarai thaniloru
savara vanithaiyai munitharu punithaiyai
avasa mudanmala radithozhu thurukiya – perumALE.
English Easy Version
thukilu(m) mrukamatha parimaLa aLakamu(m)
nekizha iru thana kiri asai thara idai
thuvaLa manitharum amararum munivarum – udan Odith
thodara vana maNi makaram ilaku kuzhai
adaruvana vida miLirvana rathi pathi
suruthi mozhivana kayal vizhi puraL thara – naduvAka
vakiru(m) mathi purai thanu nuthal panivara
vanasa patha yuka paripuram oli pada
maRuku thoRum ulavi iniya kalaviyai – vilai kURum
varaivu il arivaiyar tharu suka salathiyil
alaiyum enathu uyir anuthina(m) neRi tharu
mavuna sivasuka salathiyil muzhukuvathu – oru nALE
mukilu(m) mathiyamum ravi ezhu puraviyu(m)
nediya kulai midaRu idaRa muthu kakana
mukadu kizhipada vaLarvana kamuku ina(m) – misai vALai
muduku kayalukaL vayalkaLum muruku avizh
thadamu(m) muLariyum akazhiyum mathilkaLum
muzhuthum udaiyathu or aruNaiyil uRai tharum – iLaiyOnE
akilum maruthamum mukaLitha vakuLamum
amutha kathaliyum aruNamum varudaiyum
aparimitha matha karikaLum arikaLum – udanE koNda
aruvi izhi tharum aru varai thanil oru
savara vanithaiyai muni tharu punithaiyai
avasamudan malar adi thozhuthu urukiya – perumALE.