Thiruppugal 384 Amudhamurusol
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன – தனதான
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ – னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி – னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி – மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி – அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி – பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை – யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண – விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன – தனதான
அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர்
பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை
என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என – உரை கூறும்
அசடு மாதர் குவாது சொல் கேடிகள்
தெருவின் மீது குலாவி உலாவிகள்
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது – அருள் தாராய்
குமரி காளி வராகி மகேசுரி
கவுரி மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி – மகமாயி
குறளு ரூப முராரி சகோதரி
உலக தாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி – அபிராமி
சமர நீலி புராரி தன் நாயகி
மலை குமாரி கபாலி நல் நாரணி
சலில மாரி சிவாய மனோகரி – பரை யோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி
திகிரி மேவு கையாளி செயாள்
ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை – அருள் பாலா
திமிதம் ஆடு சுராரி நிசாசரர்
முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ஏய் ஒரு
சில பசாசு குணாலி நிணாம் உண – விடும் வேலா
திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை
முகில் உலாவு விமான நவோ நிலை
சிகர மீது குலாவி உலாவிய – பெருமாளே.
English
amutha mURuso lAkiya thOkaiyar
poruLu LAraiye nANaiyu nANaiye
naruku veedithu thAnathil vArume – nuraikURum
asadu mAtharku vAthusol kEdikaL
theruvin meethuku lAviyu lAvikaL
avarkaL mAyaipa dAmalke dAmalni – naruLthArAy
kumari kALi varAhi mahEsuri
gavuri mOdi surAri nirApari
kodiya sUli sudAraNi yAmaLi – mahamAyi
kuRaLu rUpa murAri sahOdhari
ulaga dhAri udhAri parApari
guruparAri vihAri namOhari – abirAmi
samara neeli purAritha nAyaki
malai kumAri kapAlina nAraNi
salila mAri sivAya manOhari – paraiyOgi
savuri veeri muneer vida bOjani
thigiri mEvu kaiyALi seyAL oru
sakala vEdhamum Ayina thAyumai – aruLbAlA
thimidham Adu surAri nisAcharar
mudigaL thORu kadAvi yidE oru
sila pasAsu guNAli niNAmuNa – vidumvElA
thiru ulAvu soNesar aNAmalai
mugil ulAvu vimAna navOnilai
sikara meedhu kulAvi ulAviya – perumALE.
English Easy Version
amutha mURuso lAkiya thOkaiyar
poruLu LAraiye nANaiyu nANaiye
naruku veedithu thAnathil vArumen – uraikURum
asadu mAtharku vAthusol kEdikaL
theruvin meethuku lAviyu lAvikaL
avarkaL mAyaipa dAmalke dAmalni – naruLthArAy
kumari kALi varAhi mahEsuri
gavuri mOdi surAri nirApari
kodiya sUli sudAraNi yAmaLi – mahamAyi
kuRaLu rUpa murAri sahOdhari
ulaga dhAri udhAri parApari
guruparAri vihAri namOhari – abirAmi
samara neeli purAritha nAyaki
malai kumAri kapAlina nAraNi
salila mAri sivAya manOhari – paraiyOgi
savuri veeri muneer vida bOjani
thigiri mEvu kaiyALi seyAL oru
sakala vEdhamum Ayina thAyumai – aruLbAlA
thimidham Adu surAri nisAcharar
mudigaL thORu kadAvi yidE oru
sila pasAsu guNAli niNAmuNa – vidumvElA
thiru ulAvu soNesar aNAmalai
mugil ulAvu vimAna navOnilai
sikara meedhu kulAvi ulAviya – perumALE.