திருப்புகழ் 385 உருகும் மாமெழுகாக (திருவருணை)

Thiruppugal 385 Urugummamezhugaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன – தனதான

உருகு மாமெழு காகவு மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி
லுரிய மேடையில் வார்குழல் நீவிய – வொளிமானார்

உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு
முவமை மாமயில் போல்நிற மேனிய – ருரையாடுங்

கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேநெறி
கருதொ ணாவதி பாதக னேசம – தறியாத

கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி
கணவ னேயுன தாளிணை மாமலர் – தருவாயே

சுருதி மாமொழி வேதியன் வானவர்
பரவு கேசனை யாயுத பாணிநல்
துளப மாலையை மார்பணி மாயவன் – மருகோனே

தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராடிடு
சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் – வருவோனே

அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர
னணையு நாயகி பாலக னேநிறை – கலையோனே

அணிபொன் மேருயர் கோபுர மாமதி
லதிரு மாரண வாரண வீதியு
ளருணை மாநகர் மேவியு லாவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன – தனதான

உருகும் மா மெழுகாகவுமே மயல்
பெருகும் ஆசை உ(ள்)ளாகிய பேர் வரில்
உரிய மேடையில் வார் குழல் நீவிய – ஒளி மானார்

உடை கொள் மேகலையால் முலை மூடியும்
நெகிழ நாடிய தோதகம் ஆடியும்
உவமை மாமயில் போல் நிற மேனியர் – உரை ஆடும்

கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை
கலக வாரியில் வீழ் அடியேன் நெறி
கருத ஒணா அதி பாதகன் நேசமது – அறியாத

கசட மூடனை ஆளவுமே அருள்
கருணை வாரிதியே இரு நாயகி
கணவனே உனது தாளிணை மாமலர் – தருவாயே

சுருதி மா மொழி வேதியன் வானவர்
பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல்
துளப மாலையை மார்பு அணி மாயவன் – மருகோனே

தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர்
துகளதாகவுமே எதிர் ஆடிடு
சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் – வருவோனே

அருணர் கோடியினார் ஒளி வீசிய
தருண வாள் முக மேனியனே அரன்
அணையு நாயகி பாலகனே நிறை – கலையோனே

அணி பொன் மேரு உயர் கோபுரம் மாமதில்
அதிரும் ஆரணம் வாரண வீதியுள
அருணை மா நகர் மேவி உலாவிய – பெருமாளே.

English

uruku mAmezhu kAkavu mEmayal
peruku mAsaiyu LAkiya pErvari
luriya mEdaiyil vArkuzhal neeviya – voLimAnAr

udaikoL mEkalai yAlmulai mUdiyum
nekizha nAdiya thOthaka mAdiyu
muvamai mAmayil pOlniRa mEniya – ruraiyAdung

karava thAmana mAtharkaL neeLvalai
kalaka vAriyil veezhadi yEneRi
karutho NAvathi pAthaka nEsama – thaRiyAtha

kasada mUdanai yALavu mEyaruL
karuNai vArithi yEyiru nAyaki
kaNava nEyuna thALiNai mAmalar – tharuvAyE

suruthi mAmozhi vEthiyan vAnavar
paravu kEsanai yAyutha pANinal
thuLapa mAlaiyai mArpaNi mAyavan – marukOnE

tholaivi lAvasu rEsarka LAnavar
thukaLa thAkavu mEyethi rAdidu
sudarin vElava nEyula kEzhvalam – varuvOnE

aruNar kOdiyi nAroLi veesiya
tharuNa vANmuka mEniya nEyara
naNaiyu nAyaki pAlaka nEniRai – kalaiyOnE

aNipon mEruyar kOpura mAmathi
lathiru mAraNa vAraNa veethiyu
LaruNai mAnakar mEviyu lAviya – perumALE.

English Easy Version

urukum mA mezhukAkavumE mayal
perukum Asai u(L)LAkiya pEr varil
uriya mEdaiyil vAr kuzhal neeviya – oLi mAnAr

udai koL mEkalaiyAl mulai mUdiyum
nekizha nAdiya thOthakam Adiyum
uvamai mAmayil pOl niRa mEniyar – urai Adum

karavu athu Am mana mAtharkaL
neeL valai kalaka vAriyil veezh adiyEn
neRi karutha oNA athi pAthakan nEsamathu – aRiyAtha

kasada mUdanai ALavumE aruL
karuNai vArithiyE iru nAyaki
kaNavanE unathu thALiNai mAmalar – tharuvAyE

suruthi mA mozhi vEthiyan vAnavar
paravu kEsan ai AyuthapANi al
thuLapa mAlaiyai mArpu aNi mAyavan – marukOnE

tholaivu ilA asurEsarkaL Anavar
thukaLathAkavumE ethir Adidu
sudarin vElavanE ulaku Ezh valam – varuvOnE

aruNar kOdiyinAr oLi veesiya
tharuNa vAL muka mEniyanE
aran aNaiyu nAyaki pAlakanE niRai – kalaiyOnE

aNi pon mEru uyar kOpuram mAmathil
athirum AraNam vAraNa veethiyuL
aruNai mA nakar mEvi ulAviya – perumALE.