திருப்புகழ் 387 கனை கடல் வயிறு (திருவருணை)

Thiruppugal 387 Kanaikadalvayiru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன – தநததான

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு – யங்கராஜன்

கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ – ழுங்குபோல

வினைமத கரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு – நஞ்சுபோல

விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ – ழிந்திடாதோ

முனைபெற வளையஅ ணைந்த மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக – னஞ்சமீன

முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக – செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ – ருங்குமால்கொண்

டடவியில் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன – தநததான

கனை கடல் வயிறு குழம்பி வாய்விட
வட தமனிய கிரி கம்பமாய் நட
கண பண விபரித கந்தகாள – புயங்க ராஜன்

கயிறு என அமரர் அநந்த கோடியு(ம்)
முறை முறை அமுது கடைந்த நாள்
ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக – ஒழுங்கு போல

வினை மத கரிகளும் எண் திசாமுக
கிரிகளும் முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு – நஞ்சு போல

விடு குழை அளவும் அளந்து காமுகர்
உயிர் பலி கவர் உறு பஞ்ச பாதக
விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது – ஒழிந்திடாதோ

முனை பெற வளைய அணைந்த மோகர
நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ
முகில் என உருவம் இருண்ட தாருகன் – அஞ்ச மீன(ம்)

முழுகிய திமிர தரங்க சாகர(ம்) முறை இட
இமையவர் தங்கள் ஊர் புக
முது கிரி உருவ முனிந்த சேவக – செம்பொன் மேரு

அனையன கனவித சண்ட கோபுர
அருணையில் உறையும் அருந்து உணா முலை
அபிநவ வனிதை தரும் குமார – நெருங்கு மால் கொண்டு

அடவியில் வடிவு கரந்து போய் ஒரு
குற மகள் பிறகு திரிந்த காமுக
அரி அரன் பிரம புரந்தர் ஆதியர் – தம்பிரானே.

English

kanaikadal vayiRuku zhampi vAyvida
vadathama niyakiri kampa mAynada
kaNapaNa viparitha kantha kALapu – yangarAjan

kayiRena amarara nantha kOdiyu
muRaimuRai yamuthuka daintha nALoru
kathiyaRa vulakaivi zhungu mEkavo – zhungupOla

vinaimatha karikaLu meNdi sAmuka
kirikaLu muRukida aNda kOLakai
vedipada evaraiyum vinji vElidu – nanjupOla

vidukuzhai yaLavuma Lanthu kAmuka
ruyirpali kavarvuRu panja pAthaka
vizhivalai makaLiro danpu kUrvatho – zhinthidAthO

munaipeRa vaLaiya aNaintha mOkara
nisisarar kadakamu Rinthu thULezha
mukilena vuruvami ruNda thAruka – nanjameena

muzhukiya thimiratha ranga sAkara
muRaiyida imaiyavar thanga LUrpuka
muthukiri yuruvamu nintha sEvaka – semponmEru

anaiyana kanavitha saNda kOpura
aruNaiyi luRaiyuma runthu NAmulai
apinava vanithaitha rungku mArane – rungumAlkoN

dadaviyil vadivuka ranthu pOyoru
kuRamakaL piRakuthi rintha kAmuka
ariyara piramapu rantha rAthiyar – thambirAnE.

English Easy Version

kanai kadal vayiRu kuzhampi vAyvida
vada thamaniya kiri kampamAy nada
kaNa paNa viparitha kanthakALa – puyanga rAjan

kayiRu ena amarar anantha kOdiyu(m)
muRai muRai amuthu kadaintha nAL
oru kathi aRa ulakai vizhungum mEka – ozhungu pOla

vinai matha karikaLum eN thisAmuka
kirikaLum muRukida aNda kOLakai
vedipada evaraiyum vinji vEl idu – nanju pOla

vidu kuzhai aLavum aLanthu kAmukar
uyir pali kavar uRu panja pAthaka
vizhi valai makaLirodu anpu kUrvathu – ozhinthidAthO

munai peRa vaLaiya aNaintha mOkara
nisisarar kadakam muRinthu thUL ezha
mukil ena uruvam iruNda thArukan – anja meena(m)

muzhukiya thimira tharanga sAkara(m)
muRai ida imaiyavar thangaL Ur puka
muthu kiri uruva munintha sEvaka – sempon mEru

anaiyana kanavitha saNda kOpura
aruNaiyil uRaiyum arunthu uNA mulai
apinava vanithai tharum kumAra – nerungu mAl koNdu

adaviyil vadivu karanthu pOy oru
kuRa makaL piRaku thirintha kAmuka
ari aran pirama puranthar Athiyar – thambirAnE.