Thiruppugal 388 Iraviyummadhiyum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் – தனதான
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன் – றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம் – பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங் – கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும் – படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் – திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் – றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன் – றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் – தனதான
இரவியு மதியுந் தெரிவுற எழும்
அம்புவிதனில் இனம் – ஒன்றிடுமாதும்
எழில்புதல்வரும் நின்றழுது உளமுருகும்
இடர்கொடு நடலம் – பலகூற
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு
உயிரினை நமனுங் – கருதாமுன்
கலைகொடு பல துன்பமும் அகலிட நின்
கழலிணை கருதும் – படிபாராய்
திருமருவியதிண் புயன் அயன்
விரியெண்டிசை கிடுகிட – வந்திடுசூரன்
திணிபுயமது சிந்திட அலை கடலஞ்சிட
வலியொடு – கன்றிடும்வேலா
அருமறையவர் அந்தரம் உறைபவர்
அன்புடையவர் உ(ய்)ய – அன்று அறமேவும்
அரிவையும் ஒருபங்கு இடமுடை யவர்தங்கு
அருணையி லுறையும் – பெருமாளே.
English
iraviyu mathiyun thoivuRa ezhumam
puvithani linamon – RidumAthum
ezhilputhal varunin RazhuthuLa murukum
midarkodu nadalam – palakURak
karukiya vuruvang kodukanal vizhikoN
duyirinai namanung – karuthAmun
kalaikodu palathun pamumaka lidanin
kazhaliNai karuthum – padipArAy
thirumaru viyathiN puyanayan viriyeN
disaikidu kidavan – thidusUran
thiNipuya mathusin thida alai kadalanj
sidavali yodukan – RidumvElA
arumaRai yavaran tharamuRai pavaran
pudaiyava ruya an – RaRamEvum
arivaiyu morupang kidamudai yavarthang
karuNaiyi luRaiyum – perumALE.
English Easy Version
iraviyu mathiyun thoivuRa ezhum
ampuvithanil inam – onRidumAthum
ezhilputhalvarum ninRazhuthu uLamurukum
idarkodu nadalam – palakURa
karukiya vuruvang kodukanal vizhikoNdu
uyirinai namanung – karuthAmun
kalaikodu pala thunpamum akalida nin
kazhaliNai karuthum – padipArAAy
thirumaruviyathiN puyan ayan viriyeNdisai
kidukida vanthidu – sUran
thiNipuyamathu sinthida alai kadalanjida
valiyodu kanR – idumvElA
arumaRaiyavar antharam uRaipavar
anpudaiyavar u(y)ya – anRu aRamEvum
Aivaiyum orupangku idamudai yavarthangku
aruNaiyi luRaiyum – perumALE.